ஐக்கிய நாடுகள் சபையின் கைத்தொழில் அபிவிருத்தி நிலையத்தின் இயக்குனர் Kandeh K. Yumkella எதிர்வரும் செவ்வாய்க்கிழமை சிறிலங்காவுக்கு விஜயம் செய்யவுள்ளார்.
எதிர்வரும் 12ஆம் திகதி வரை கொழும்பில் தங்கியிருக்கவுள்ள இவர் சிறிலங்கா ஜனாதிபதி மகிந்த ராஜபக்ச, வெளிவிவகார அமைச்சர் ஜீ.எல்.பீரிஸ், வர்த்தக மற்றும் கைத்தொழில் அமைச்சர் உட்பட முக்கிய தலைவர்களைச் சந்தித்து பேச்சுவார்த்தை நடத்தவுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது.
இக்காலப் பகுதியில் கொழும்பில் நடைபெறவுள்ள ஒன்பதாவது ஆசிய பசுபிக் பிராந்திய வட்டமேசை மாநாட்டிலும் இவர் உரையாற்றவுள்ளார்.
அத்துடன், சிறிலங்காவின் கைத்தொழில் சம்மேளத்தினால் ஒழுங்கு செய்யப்பட்டுள்ள கருத்தரங்கு ஒன்றில் 21ஆம் நூற்றாண்டில் கைத்தொழில் அபிவிருத்தி எதிர்நோக்கும் சவால்கள் குறித்து இவர் உரையாற்றவுள்ளார்.
அதேவேளை, எதிர்வரும் 10ஆம் திகதி இவருடனான ஊடகவியலாளர் மாநாட்டுக்கும் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளதாக ஐக்கிய நாடுகள் சபையின் கைத்தொழில் அபிவிருத்தி நிலையம் அறிவித்துள்ளது.
இவர் கொழும்புக்கு விஜயம் செய்வதற்கு முன்னர் பங்களாதேஸூக்கும், கொழும்பு விஜயத்தை முடித்துக் கொண்டு ஜப்பானுக்கும் செல்லவுள்ளமை குறிப்பிடத்தக்கது.







0 kommentarer:
Post a Comment
உங்களுடைய கருத்தை தெருவிக்கவும்!
நீங்கள் உங்கள் கருத்தை எழுதும் பொழுது தயவுசெய்து முடிந்தவரை தமிழில் எழுதவும்.