இலங்கையில் இடம்பெற்ற இறுதிக்கட்டப் போரின் போது போர்க் குற்றங்கள் மற்றும் மனித உரிமை மீறல்கள் இடம்பெற்றதாக முன்வைக்கப்பட்டுள்ள குற்றச்சாட்டுக்கள் தொடர்பில் சர்வதேச விசாரணைகள் தேவையில்லை என சிறிலங்கா மீண்டும் அறிவித்துள்ளது.இப் போரின் போது மேற்கொள்ளப்பட்ட போர்க் குற்றங்கள் மற்றும் மனித உரிமை மீறல்கள் தொடர்பில் சர்வதேச விசாரணைகள் அவசியமானது என ஐக்கிய நாடுகள் சபையின் மனித உரிமைகள் ஆணையாளர் நவநீதம்பிள்ளை நேற்று வலியுறுத்தியிருந்தார்.
இந்நிலையில், ஜனாதிபதி மகிந்த ராஜபக்சவால் நியமிக்கப்பட்ட உண்மைகளைக் கண்டறிவதற்கான நல்லிணக்கக் குழு விசாரணைகளை ஆர்ம்பித்துள்ளதால், குறித்த குற்றச்சாட்டுக்கள் தொடர்பஜலான சர்வதேச விசாரணைகளுக்கு அவசியம் இல்லை என சிறிலங்காவின் ஊடக அமைச்சர் கெஹெலிய ரம்புக்வெல்ல தெரிவித்துள்ளார்.
அத்துடன், சிறிலங்கா ஜனநாயக ரீதியில் மக்களால் தெரிவு செய்யப்பட்ட அரசைக் கொண்ட இறைமையுள்ள நாடு என்றும், அதன் உள்விவகாரங்கள் தொடர்பான தீர்மானங்களை எடுக்கும் உரிமை நாட்டுக்கே உண்டு என்றும் அவர் கூறியுள்ளார்.
அதேவேளை, ‘இக் குற்றச்சாட்டுக்கள் தொடர்பில் அரசாங்கம் முன்னெடுத்துள்ள நடவடிக்கைகளை வேறு சில நாடுகளும் வரவேற்றுள்ளன. எவ்வாரெனினும் தவறுகளை நாங்களே திருத்திக் கொள்வதில் தற்போது அதிக அக்கறை காண்பித்து வருகின்றோம். இந் நிலையில், சர்வதே விசாரணைகளுக்கு தேவை ஏதுமில்லை’ என அவர் மேலும் தெரிவித்துள்ளார்.






0 kommentarer:
Post a Comment
உங்களுடைய கருத்தை தெருவிக்கவும்!
நீங்கள் உங்கள் கருத்தை எழுதும் பொழுது தயவுசெய்து முடிந்தவரை தமிழில் எழுதவும்.