2013ஆம் ஆண்டு சிறிலங்காவில் நடைபெறவுள்ள பொதுநலவாய நாடுகளின் மாநாட்டை ஆரம்பித்து வைப்பதற்காக பிரித்தானிய மகாராணி எலிசபெத் கொழும்புக்கு விஜயம் செய்வார் என எதிர்பார்க்கப்படுகின்றது.
இம் மாநாட்டை ஆரம்பித்து வைப்பதற்காகவும், மாநாட்டின் நிகழ்வுகளில் கலந்து கொண்வதற்காகவும் பிரித்தானிய மகாராணி எலிசபெத் சிறிலங்காவுக்கு விஜயம் செய்யவுள்ளதாக சிறிலங்காவுக்கான பிரித்தானியத் தூதரகத்தின் பேச்சாளர் டொமினிக் வில்லியம்ஸ் தெரிவித்துள்ளார்.
அத்துடன், பொதுநலவாய நாடுகளின் அமைப்பில் அங்கம் வகிக்கும் நாடுகளின் தலைவர்களின் கூட்டத்திலும் மகாராணி எலிசபெத் கலந்து கொள்ளவுள்ளதாக அவர் கூறியுள்ளார்.
அடுத்த பொதுநலவாய நாடுகளின் மாநாடு 2011ஆம் ஆண்டு அவுஸ்திரேலியாவில் நடைபெறவுள்ளமை குறிப்பிடத்தக்கது.
இதேவேளை, எதிர்வரும் ஒக்டோபர் மாதம் புதுடில்லியில் நடைபெறவுள்ள பொதுநலவாய விளையாட்டுப் போட்டிகளில் பிரித்தானிய மகாராணி எலிசபெத் கலந்து கொள்ள மாட்டார் என பக்கிங்ஹாம் மாளிகையின் ஊடகப் பேச்சாளர் தெரிவித்தார்.
பொதுநலவாய விளையாட்டுப் போட்டிகளில் மகாராணி எலிசபேத் கலந்து கொள்ளத் தவறியமை தசாப்த காலங்களில் இதுவே முதல் தடவை என்றும் தெரிவிக்கப்படுகிறது.
பொதுநலவாயத் தலைமைப் பதவியிலிருக்கும் 84 வயதான மகாராணி எலிசபேத்துக்குப் பதில் அவரது மூத்தப் புதல்வரான இளவரசர் சார்ள்ஸ் ஒக்டோபர் 3 முதல் 14ஆம்; திகதி வரை நடைபெறும் இந் நிகழ்வுகளில் கலந்து கொள்வார் என எதிர்பார்க்கப்படுகிறது.







0 kommentarer:
Post a Comment
உங்களுடைய கருத்தை தெருவிக்கவும்!
நீங்கள் உங்கள் கருத்தை எழுதும் பொழுது தயவுசெய்து முடிந்தவரை தமிழில் எழுதவும்.