நாடுகடந்த தமிழீழ அரசாங்கத்தை குழப்பி அதன் செயற்பாடுகளை இல்லாது ஒழிக்கும் பாரிய சதித் திட்டம் ஒன்றை நோர்வேயில் இருந்து திரைமறைவில் ஆரம்பித்துள்ளது என்ற திடுக்கிடும் செய்தி தற்பொழுது அம்பலமாகியுள்ளது.
நாடுகடந்த அரசாங்கத்தை எவ்வாறு இல்லாமல் செய்வதற்கான இலங்கை அரசாங்கத்தின் நடவடிக்கைகள் ஒருபுறம் இருக்க அதில் பார்க்க மிக வேகமான முறையில் நாடுகடந்த அரசின் செயற்பாடுகளை இல்லாமல் செய்வதற்கு நோர்வே குழு களமிறங்கி இருக்கிறது.
நாடுகடந்த அரசாங்கத்தை அமைப்பதற்கான நடவடிக்கைகள் ஆரம்பிக்கப்பட்டதில் இருந்து அதற்கு எதிராக பல்வேறு கருத்துக்களை வெளியிட்டு புலம்பெயர் மக்களை குழப்பும் நடவடிக்கைகளில் ஈடுபட்ட அந்தக் குழு அந்த முயற்சி பயன் அளிக்காமல் போக நாடுகடந்த அரசாங்கத்தில் தமது சார்பான வேட்பாளர்களை நிறுத்தி அதை தமது கட்டுப்பாட்டில் கொண்டுவருவதற்கு முயற்சி செய்தது. அந்த சதித் திட்டத்தை விளங்கிக் கொண்ட நாடுகடந்த அரசின் வேட்பாளர்கள் நோர்வே குழுக்களின் நடவடிக்கைக்கு துணைபோகாமல் இருந்ததனால் அந்த முயற்சியும் பயனளிக்கவில்லை.
தற்பொழுது அவர்கள் தமிழர் தேசிய அவை என்ற ஒரு போர்வையில் புலம்பெயர் நாடுகளில் இன்னுமொரு தேர்தலை நடாத்த முயற்சி செய்து வருகிறார்கள். தமிழர் தேசிய அவை என்ற தேர்தல் யாரால் நடாத்தப்படுகிறது என்று ஆராயப் போனால் அதன் பின்னணி நாடுகடந்த அரசுக்கு எதிராக செயற்பட்ட நோர்வே குழு இருப்பது அம்பலமாகி உள்ளது.
புலம்பெயர் மக்கள் அமைப்புக்கள் எல்லாவற்றையும் ஒன்றிணைக்கும் அமைப்பாக தமிழர் தேசிய அவை விளங்கும் என்ற ஒரு கருத்தை அவர்கள் வெளியிட்டுக் கொண்டு அதற்கான தேர்தல் என்று இறங்கி இருக்கிறார்கள்.
வழமையாக நோர்வே குழு ஐரோப்பாவில் தான் தனது நடவடிக்கைகளை கடந்த காலங்களில் ஆரம்பித்து அதனை தொடர்ந்து கனடா அமெரிக்கா நாடுகளிற்கு கொண்டு சென்றது.
தற்பொழுது அவர்களின் நடவடிக்கையை கனடாவில் தொடங்கி அதனை தொடர்ந்து ஐரோப்பிய நாடுகளில் தமிழர் தேசிய அவை தேர்தலை நடாத்த திட்டமிட்டு உள்ளனர்.
குறிப்பாக, கனடிய தமிழர் தேசிய அவை உருவாக்கத்திற்கு அனைவரும் ஆதரவு வழங்குவோம் – நாடு கடந்த தமிழீழ அரசாங்க கனடியப் பிரதிநிதிகள் வேண்டுகோள்’ என்ற பெயரில் ஊடகங்களுக்கு அனுப்பி வைக்கப்பட்டுள்ள ஊடக அறிக்கை பெரும் சர்ச்சையைத் தோற்றுவித்துள்ளது.
இந்த ஊடக அறிக்கையில் கனடாவிலிருந்து தெரிவு செய்யப்பட்ட 25 பிரதிநிதிகளின் பெயர்களும் குறிப்பிடப்பட்டுள்ள போதிலும் இந்தப் பிரதிநிதிகளில் பலர் இந்த அறிக்கை குறித்து தாம் எதுவுமே அறிந்திருக்கவில்லை எனக் கையை விரித்துள்ளனர்.
இது போன்ற ஊடக அறிக்கைகள் கைச்சாத்திட்டவர்களின் அனுமதியின்றிப் பிரசுரிக்கப்படுவது சரியான முன்னுதாரணமாக அமையப் போவதில்லை எனச் சில பிரதிநிதிகள் தமது கவலையை வெளிப்படுத்தியுள்ளனர். இவையெல்லாம் நோர்வே குழுவின் நடவடிக்கைதான என்பது தெளிவாகியுள்ளது.
நாடுகடந்த அரசின் செயற்பாடுகளிற்கு புலம்பெயர் அமைப்புக்கள் புலம்பெயர் மக்கள் தான் பக்க பலமாக நிற்கிறார்கள். ஆனால் இவர்கள் புலம்பெயர் அமைப்புக்களை ஒன்றிணைக்கும் அமைப்பு தான் தமிழர் தேசிய அவை என்று கூறிக் கொண்டு நாடுகடந்த அரசின் செயற்பாடுகளிற்கு முட்டுக் கட்டைகளை ஏற்படுத்தி நாடுகடந்த அரசை குழப்பும் ஒரு நடவடிக்கையில் நோர்வே குழு இறங்கி உள்ளது.
தமிழர் தேசிய அவைக்கான தேர்தல் தற்பொழுது தேவைதானா? அதன் உள் நோக்கங்களை புலம்பெயர் மக்கள் விளங்கி அந்த நோர்வே குழுவின் முயற்சிக்கு துணை போகாமல் இருப்பதே நாம் அந்த உயரிய தலைவனுக்கு செய்யும் நன்றி கடன்……..







0 kommentarer:
Post a Comment
உங்களுடைய கருத்தை தெருவிக்கவும்!
நீங்கள் உங்கள் கருத்தை எழுதும் பொழுது தயவுசெய்து முடிந்தவரை தமிழில் எழுதவும்.