திருகோணமலையில் தமிழ் மக்களின் காணிகளை அபகரித்து அவற்றில் சிங்கள மக்களைக் குடியேற்றும் திட்டம் தொடர்ந்து முன்னெடுக்கப்பட்டு வருவதாகத் தெரிவிக்கப்படுகிறது.
ஏற்கனவே திருகோணமலை மாவட்டத்தின் சம்பூர் உள்ளிட்ட பல பகுதிகளிலிருந்து யுத்த காலத்தில் இடம்பெயர்ந்த மக்கள் மீளவும் குடியேற்றப்படாத நிலையில் சிங்கள மக்கள் பெருமெடுப்பில் குடியேற்றப்பட்டு வருவதாகச் செய்திகள் தெரிவிக்கின்றன.
திருகோணமலையின் பிரதான வயல் நிலங்கள் அமைந்துள்ள படுகாடு, ஒட்டு, கங்குவேலி ஆகிய பகுதிகளில் பெருமளவான நிலங்கள் அபகரிக்கப்பட்டு அங்கு சிங்கள மக்களால் விவசாய நடவடிக்கைகள் மேற்கொள்ளப்படுவதாகவும் சுட்டிக் காட்டப்பட்டுள்ளது.
அத்துடன் குச்சவெளி, மொறவௌ ஆகிய பகுதிகளிலும் பெருமளவான காணி அபகரிக்கப்பட்டுள்ளதாகத் தெரிவிக்கப்படுகிறது.
இதனிடையே சுற்றுலாப் பிரதேசமான நிலாவெளியிலும் பெருமளவான சிங்கள மக்கள் வர்த்தக நடவடிக்கைகளுக்காக அரச ஆதரவுடன் குடியேற்றப்படுவதாகவும் திருகோணமலைச் செய்திகள் தெரிவிக்கின்றன.







0 kommentarer:
Post a Comment
உங்களுடைய கருத்தை தெருவிக்கவும்!
நீங்கள் உங்கள் கருத்தை எழுதும் பொழுது தயவுசெய்து முடிந்தவரை தமிழில் எழுதவும்.