அவுஸ்திரேலியாவின் கிறிஸ்மஸ் தீவில் அமைந்துள்ள அகதிகள் தடுப்பு முகாம்களில் இடப்பற்றாக்குறை ஏற்பட்டுள்ளது.
இதனால், இத்தடுப்பு முகாம்களில் இருந்து 150 இலங்கைத் தமிழர்கள் உட்பட 700 அகதிகள் அவுஸ்திரேலியாவின் பிரதான நிலப்பரப்புக்கு கொண்டு செல்லப்படவுள்ளனர்.
இது குறித்து கருத்துத் தெரிவித்துள்ள அவுஸ்திரேலிய குடிவரவு அமைச்சர் கிறிஸ் இவான்ஸ், இவர்களை இடமாற்றுவதற்கான முதற்கட்ட நடவடிக்கை இன்று மேற்கொள்ளப்படவுள்ளதாக தெரிவித்துள்ளார்.
இதன் பிரகாரம், சுமார் 300 வரையிலான அகதிகள் அவுஸ்திரேலியாவின் மேற்குப் பகுதியில் அமைந்துள்ள பின்தங்கிய பகுதியாகிய கேட்டினினுக்கு இடமாற்றப்பட உள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது.
கிறிஸ்மஸ் தீவில் ஆகக் கூடுதலாக 2,500 பேர் தங்குவதற்கான வசதிகளே உள்ள நிலையில், தற்போது அங்கு 2,436 அகதிகள் தடுத்து வைக்கப்பட்டுள்ளனர்.
இலங்கையிலிருந்து வரும் அகதிகளின் தஞ்சம் கோரும் விண்ணப்பங்களை மூன்று மாதங்களுக்கும், ஆப்கானிஸ்தான் அகதிகளின் விண்ணப்பங்களை ஆறு மாதங்களுக்கும் பரிசீலிப்பதில்லை என்று கடந்த ஏப்ரல் மாதம் அவுஸ்திரேலிய அரசாங்கம் அறிவித்திருந்தமை குறிப்பிடத்தக்கது.







0 kommentarer:
Post a Comment
உங்களுடைய கருத்தை தெருவிக்கவும்!
நீங்கள் உங்கள் கருத்தை எழுதும் பொழுது தயவுசெய்து முடிந்தவரை தமிழில் எழுதவும்.