Tuesday, May 25, 2010

இந்தியாவுடனான பரந்துபட்ட பொருளாதார பங்குடமை உடன்படிக்கைக்கு எதிர்ப்பு!

இந்தியாவுடனான பரந்துபட்ட பொருளாதார பங்குடமை உடன்படிக்கையை சிறிலங்காவில் நடைமுறைப்படுத்துவதற்கு எதிர்ப்புத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

கொழும்பின் முக்கிய வர்த்தக நிறுவனங்களின் இயக்குனர்கள், தொழிலாளர்கள், மருத்துவர்கள் சட்டவல்லுநர்கள் போன்ற ஆயிரத்துக்கு மேற்பட்டவர்கள் இன்று அலரி மாளிக்கைக்கு முன் இந்தியாவுடனான பரந்துபட்ட பொருளாதார பங்குடமை உடன்படிக்கையை சிறிலங்காவில் நடைமுறைப்படுத்துவதற்கு எதிர்ப்புத் தெரிவித்துள்ளனர்.

இந்த எதிர்ப்பு நடவடிக்கையின் பின்னர் இவர்கள் சிறிலங்கா ஜனாதிபதி மகிந்த ராஜபக்சவை அலரி மாளிகையில் சந்தித்து இந்தியாவுடனான பரந்துபட்ட பொருளாதார பங்குடமை உடன்படிக்கையில் கையெழுத்திட வேண்டாம் எனக் கோரி மனுவொன்றைக் கையளித்துள்ளனர்.

இந்த மனுவைப் பெற்றுக் கொண்ட ஜனாதிபதி மகிந்த ராஜபக்ச, சிறிலங்காவின் நலன்களுக்கு எதிரான எந்த ஒப்பந்தத்திலும் தான் கையெழுத்திட மாட்டேன் என உறுதியளித்துள்ளார்.

இந்நிகழ்வில், ஜனாதிபதியின் செயலாளர் லலித் ரதுங்க மற்றும் திறைசேரியின் செயலாளர் பி.ஜெயசுந்தர ஆகியோரும் கலந்து கொண்டனர்.

சிறிலங்காவுடனான பரந்துபட்ட பொருளாதார பங்குடமை உடன்படிக்கையை புதுப்பிப்பதற்கான முயற்சிகளை இந்தியா மேற்கொண்டிருந்த நிலையிலேயே இந்த எதிர்ப்பு வெளிப்படுத்தப்பட்டுள்ளது.

இரு நாடுகளுக்கும் இடையில் பரந்துபட்ட பொருளாதார பங்குடமை உடன்படிக்கையை கைச்சாத்திடுவதற்கான முயற்சிகள் 2008ஆம் ஆண்டு மேற்கொள்ளப்பட்ட போதிலும், இலங்கையில் நடைபெற்ற உள்நாட்டுப் போரினால் அது கைகூடவில்லை.

இலங்கையில் போர் முடிவுக்கு வந்துள்ள நிலையில் இந்த உடன்பாட்டை மீண்டும் புதுப்பிப்பதற்கான முயற்சிகளில் இந்தியா தீவிர நடவடிக்கைகளை மேற்கொண்டிருந்தமை குறிப்பிடத்தக்கது.

0 kommentarer:

Post a Comment

உங்களுடைய கருத்தை தெருவிக்கவும்!

நீங்கள் உங்கள் கருத்தை எழுதும் பொழுது தயவுசெய்து முடிந்தவரை தமிழில் எழுதவும்.