Monday, May 24, 2010

இந்தியா எம்மை அச்சுறுத்திய காலம் மலையேறி விட்டது, இலங்கையின் இனப்பிரச்சினைக்கு எத்தகைய அரசியல் தீர்வு தேவையென்பதை இந்தியா எமக்குச் சொல்லித் தர வேண்டியதில்லை: குணதாச அமரசேகரா

இந்தியா எம்மை அச்சுறுத்தி வாழ்ந்த காலம் மலையேறி விட்டது என்றும் இப்போது இலங்கைக்குப் பக்க பலமாக சீனா, ஈரான் ஆகிய நாடுகள் இருக்கின்றன என்றும் தேசப்பற்றுள்ள தேசிய இயக்கத்தின் தலைவர் குணதாச அமரசேகரா தெரிவித்துள்ளார். இலங்கையின் இனப்பிரச்சினைக்கு எத்தகைய அரசியல் தீர்வு தேவை என்பதை இந்தியா எமக்குச் சொல்லித் தர வேண்டியதில்லை எனத் தெரிவித்த அமரசேகரா இந்தியாவின் தேவையை நிறைவேற்ற முடியாது என்பதை மகிந்த றாஜபக்ச தெளிவாக இந்தியாவிடம் தெரிவிக்க வேண்டும் எனவும் கேட்டுள்ளார்.

இலங்கையில் தோன்றிய பிரிவினைவாதத்தின் பின்னணியில் இந்தியாவே இருந்தது எனத் தெரிவித்த அமரசிங்க 1987ம் ஆண்டில் எமது நாட்டு வான் பரப்பிற்குள் புகுந்து பருப்பினைப் போட்டு ஜே.ஆர் அரசாங்கத்தைப் பயன்படுத்தி இந்திய இலங்கை ஒப்பந்தத்தை எழுதியதைப் போல மீண்டும் ஒரு முறை இலங்கையை அச்சுறுத்த முடியாது எனவும் தெரிவித்துள்ளார்.

யுத்தத்தின் போது எவருக்கும் அஞ்சாது செயற்பட்டதைப் போல ஜனாதிபதி மகிந்த றாஜபக்ச இந்தியாவின் அச்சுறுத்தலுக்கு அஞ்சாது செயற்படுவார் எனத் தான் நம்புவதாகவும் அமரசிங்க தெரிவித்துள்ளார்.

இலங்கையில் பிரிவினை வாதத்தை அரசாங்கம் வெற்றி கொண்டுள்ள போதிலும் நாட்டைத் துண்டாட வேண்டும் என்ற எண்ணம் இந்தியா மற்றும் மேலை நாடுகள் தொடர்ந்தும் இருப்பதாகவும் இது தொடர்பாக அரசாங்கம் தொடர்ந்து எச்சரிக்கையுடன் செயற்பட வேண்டும் என்றும் குணதாச அமரசேகர தெரிவித்துள்ளார்.

0 kommentarer:

Post a Comment

உங்களுடைய கருத்தை தெருவிக்கவும்!

நீங்கள் உங்கள் கருத்தை எழுதும் பொழுது தயவுசெய்து முடிந்தவரை தமிழில் எழுதவும்.