யாழ்ப்பாணத்தில் 2001ம் ஆண்டு காலப் பகுதியில் 21 ஆயிரம் சிங்கள மக்கள் வாழ்ந்ததாகவும் அவர்கள் தொடர்ந்து அங்கு வாழ்ந்திருந்தால் அந்த எண்ணிக்கை தற்போது 40 ஆயிரம் ஆக அதிகரித்திருக்கும் எனவும் எனவே அந்த மக்கள் மீளவும் இந்தப் பகுதியில் குடியேற்ற நடவடிக்கை எடுக்கப்பட வேண்டும் என்றும் மின்சக்தி அமைச்சரும் ஹெல உறுமய கட்சியின் கொள்கை வகுப்பாளருமான சம்பிக றணவக தெரிவித்துள்ளார். ஆத்துடன் அந்தப் பகுதியில் வாழ்ந்த முஸ்லிம் தமிழ் மக்களும் மீளவும் குடியமர்த்தப்பட வேண்டும் எனவும் அவர் தெரிவித்தார். தேவேந்திரமுனையில் இருந்து பருத்தித்துறை வரை அனைத்துப் பகுதிகளிலும் அனைத்து இன மக்களும் வாழும் சூழல் ஏற்படுவதையே தமது கட்சி விரும்புவதாகவும் சம்பிக ரணவக தெரிவித்துள்ளார்.
தமிழர் தாயகப் பிரதேசங்களில் வேகமான சிங்களக் குடியேற்றங்கள் மேற்கொள்ளப்பட்டு வரும் சூழலிலேயே இந்தக் கருத்து வெளியிடப்பட்டுள்ளது எதிர்காலத்தில் யாழ்ப்பாணத்திலும் சிங்களமக்களை குடியேற்யும் திட்டத்தினை கொண்டள்ளதாக கருதப்படுகிறது.






0 kommentarer:
Post a Comment
உங்களுடைய கருத்தை தெருவிக்கவும்!
நீங்கள் உங்கள் கருத்தை எழுதும் பொழுது தயவுசெய்து முடிந்தவரை தமிழில் எழுதவும்.