முக்கொம்பன் கிராமத்தில் உள்ள பாடசாலையில் கல்வி கற்றுக் கொண்டிருக்கும் மாணவியை திருமணம் செய்வதாக ஆசைவார்த்தை கூறி இலங்கை இராணுவச் சிப்பாய் ஒருவர் அழைத்துச் சென்றுள்ளார். இந்தச் சம்பவம் பற்றி மேலும் தெரிய வருவதாவது, இலங்கை அரசினால் மீள்குடியேற்றம் செய்யப்பட்டுள்ள முக்கொம்பன் கிராமத்தில் 10 வது தரம் கல்வி கற்ற கலைமகள் என்ற 18 வயது பூர்த்தியடையாத சிறுமியை திருமணம் செய்வார் என்று ஆசைவார்த்தை கூறி சிங்கள இராணுவச் சிப்பாய் ஒருவர் தன்னுடன் அழைத்துச் சென்றுள்ளார். கடந்த மே 18 அன்று இச்சம்பவம் இடம்பெற்றுள்ளது. இச்சம்பவத்தால் அங்குள்ள தமிழர்கள் மத்தியில் அச்சமும் பதற்றமும் நிலவுகின்றது. இராணுவத்தினர் அங்கு தமிழ்மக்களை மனிதாபிமானமற்ற முறையில் நடத்துவதாகவும் சிறுமியின் பெற்றோர் தேடியலைவதாகவும் தெரிவிக்கப்படுகிறது.






0 kommentarer:
Post a Comment
உங்களுடைய கருத்தை தெருவிக்கவும்!
நீங்கள் உங்கள் கருத்தை எழுதும் பொழுது தயவுசெய்து முடிந்தவரை தமிழில் எழுதவும்.