எல்லா மதங்களும் நல்ல விடயங்களையே கூறுகின்றன. அதேபோன்றே பௌத்தம், அவை கூறும் கருத்துக்களை பின்பற்றுவதன் மூலம் நாம் சிறந்த மனிதனாகவும் மற்றவர்களுக்கு வழிகாட்டியாகவும் இருக்க முடியும் என்று கிழக்கு முதலமைச்சர் சிவநேசதுரை சந்திரகாந்தன் (பிள்ளையான்) தெரிவித்திருக்கிறார். கடந்த காலங்களில் நாங்கள் பௌத்த மத நிகழ்வுகளில் பங்குபற்றாத நடைமுறை இருந்தது. ஆனால் தற்போது அந்நிலைவரம் மாற்றப்பட்டு ஏனைய மதங்களையும் மதித்து நடக்க வேண்டிய சூழ்நிலை உருவாக்கப்பட்டுள்ளது.
மட்டக்களப்பு கல்குடாவில் நடைபெற்ற வெசாக் தின மதவழிபாடு அன்னதான நிகழ்வில் பிரதம அதிதியாக கலந்து கொண்டு உரையாற்றும் போதே இவ்வாறு தெரிவித்தார். அங்கு மேலும் அவர் உரையாற்றும் போது, பௌத்தம் பாவம் செய்ய வேண்டாம் எனக் கூறுகிறது. எமது சமூகத்தை வளர்க்க எல்லா மத நிகழ்வுகளிலும் பங்குகொண்டு மனிதனாக வாழப் பழகிக் கொள்ள வேண்டும் என்ற நிலைப்பாடு உள்ளது.
பௌத்த மதம் சிங்களவர்களுக்கு மாத்திரம் சொந்தமானதொன்றல்ல என்ற வரலாற்று உண்மைகள் என்னவென்பதை நீங்கள் அறிவீர்கள். எனவே தமிழ் மக்களும் பௌத்த மத சிந்தனைகளை பின்பற்றி மனிதனாக வாழப் பழகிக் கொள்ள வேண்டும். கடந்த கால கசப்பான உணர்வுகளை மறந்து சகல இன மக்களையும் ஒன்று சேர்க்கும் நிகழ்வாக எல்லோரும் ஒற்றுமையாக வாழப் பழகிக் கொள்ளக் கூடிய சூழ்நிலையை செவாக் தினத்தில் உருவாக்க வேண்டும் என்றார்.







0 kommentarer:
Post a Comment
உங்களுடைய கருத்தை தெருவிக்கவும்!
நீங்கள் உங்கள் கருத்தை எழுதும் பொழுது தயவுசெய்து முடிந்தவரை தமிழில் எழுதவும்.