Sunday, May 23, 2010

இரத்தினபுரியில் கைக்குண்டுத் தாக்குதல். 10 பேர் காயம்

இரத்தினபுரி மாவட்டத்தின் இறக்குவாணை டெல்வின் தோட்டப்பிரிவில் கைக்குண்டு தாக்குதல் ஒன்று இடம்பெற்றுள்ளதாக பிந்திய செய்திகள் வெளியாகியுள்ளன. டெல்வின் தோட்டப்பிரிவுக்குட்பட்ட பிரதேசத்தில் சற்று முன்னர் இடம்பெற்ற கைக்குண்டு தாக்குதலில் 10 பேர் காயமடைந்துள்ளனர்.

காயமடைந்தவர்களுள் 2 பெண்கள், 2 சிறுவர்கள், 6 இளைஞர்கள் உள்ளனர். இதேவேளை காயமடைந்தவர்கள் இரத்தினபுரி வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர். இவர்களுல் 3 பேர் அவசர சிகிச்சை பிரிவில் அனுமதிக்கப்பட்டுள்ளதாகவும் வீரகேசரி இணையத்தளம் செய்தி வெளியிட்டுள்ளது.

இக் கைக்குண்டு தாக்குதல் தனிப்பட்ட காரணங்களுக்காக இடம்பெற்றிருக்கிறது என பொலிஸார் தெரிவித்தனர், இதேவேளை இச்சம்பவம் தொடர்பில் மேலதிக விசாரணைகளை நடத்தி வருவதாகவும் இறக்குவாணை பொலிஸார் தெரிவித்தனர்.

0 kommentarer:

Post a Comment

உங்களுடைய கருத்தை தெருவிக்கவும்!

நீங்கள் உங்கள் கருத்தை எழுதும் பொழுது தயவுசெய்து முடிந்தவரை தமிழில் எழுதவும்.