Sunday, May 23, 2010

பெரியார் திராவிடர் கழகத்தின் சார்பில் "குருதியில் உறைந்த மே 17"

பெரியார் திராவிடர் கழகத்தின் சார்பில் "குருதியில் உறைந்த மே 17" என்ற தலைப்பில் முள்ளி வாய்க்கால் படுகொலை கண்டன பொதுக்கூட்டம் கடந்த மே 16 அன்று மாலை சென்னை எம்.ஜி.ஆர். நகரில் நடைபெற்றது.

சிங்கள இனவெறி அரசால் நிகழ்த்தப்பட்ட வெறியாட்டங்களும், படுகொலைகளும் பொதுமக்களுக்கு புகைப்படங்களாக காட்சிக்கு வைக்கப்பட்டது. தேனிசை செல்லப்பா எழுச்சி இசை வழங்க்கினார். "உலக தேசிய இன போராட்டங்கள்" என்ற நூல் வெளியிடப்பட்டது.

நிகழ்ச்சியில் ஈகைச்சுடர் ஏற்றப்பட்டு, பொதுமக்கள் மெழுகு வர்த்தி ஏந்தி போரில் உயிர் நீத்த ஈழப் போராளிகளுக்கும், மக்களுக்கும் உணர்ச்சி பூர்வமான வீரவணக்கம் செலுத்தினர். கூட்டத்தில் இதழியலாளர் அய்யநாதன், விடுதலை இராசேந்திரன், ஆனூர் செகதீசன் மற்றும் பெரியார் திராவிடர் கழகத்தின் தலைவர் கொளத்தூர் மணி ஆகியோர் உரையாற்றினர்.

மணி அவர்கள் தமது உரையில் ஈழப் போராட்டத்தை எவ்வடிவிலும் தொடர்ந்து தமிழகம் ஆதரிக்க வேண்டும் என்றும் மத்திய மாநில அரசுகளின் துரோகத்தையும் விளக்கியும் பேசினார். பெருந்திரளாக பொதுமக்கள் பங்கேற்றனர்.

0 kommentarer:

Post a Comment

உங்களுடைய கருத்தை தெருவிக்கவும்!

நீங்கள் உங்கள் கருத்தை எழுதும் பொழுது தயவுசெய்து முடிந்தவரை தமிழில் எழுதவும்.