Wednesday, February 24, 2010

ஐக்கிய தேசியக் கட்சிக்குள் பாரிய பிளவு: கிழக்கு மாகாண அமைப்பாளர்கள் செயற்குழுவில் இருந்து வெளியேற்றம்

ஐக்கிய தேசியக் கட்சிக்குள் இன்று பாரிய பிளவு ஏற்பட்டுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன. கிழக்கு மாகாணம், திருகோணமலை, அம்பாறை மற்றும் மட்டக்களப்பு மாவட்டங்களின் ஐக்கிய தேசியக் கட்சி அமைப்பாளர்கள் இன்று கொழும்பில் இடம்பெற்ற கட்சியின் செயற்குழு கூட்டத்தில் இருந்து வெளியேறியுள்ளனர்.

கிழக்கு மாகாணத்தில் ரவூப் ஹக்கீமின் ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸுக்கு அதிக ஆசனங்களை ஒதுக்கி, ஐக்கிய தேசியக் கட்சியை சேர்ந்த தமக்கு அநீதி இழைக்கப்பட்டுள்ளதாக தெரிவித்தே இவர்கள் வெளியேறியுள்ளனர்.

திருகோணமலை மாவட்ட அமைப்பாளர் மஹ்ருப், அம்பாறை மாவட்ட அமைப்பாளர் தயா கமகே மற்றும் மட்டக்களப்பு மாவட்ட அமைப்பாளர் சசிதரன் ஆகியோரே செயற்குழுவில் இருந்து வெளியேறியவர்களாவர்.

இந்தநிலையில் அவர்கள் நாளையதினம் கொழும்பில் ஊடகவியலாளர் சந்திப்பு ஒன்றை நடத்த திட்டமிட்டுள்ளனர் என தெரியவருகின்றது.

0 kommentarer:

Post a Comment

உங்களுடைய கருத்தை தெருவிக்கவும்!

நீங்கள் உங்கள் கருத்தை எழுதும் பொழுது தயவுசெய்து முடிந்தவரை தமிழில் எழுதவும்.