Wednesday, February 10, 2010

சரத் பொன்சேகா விடுதலை செய்யும் வரை ஆர்ப்பாட்டங்கள் தொடரும்: கரு ஜயசூரிய

முன்னாள் கூட்டுப்படைகளின் பிரதானி ஜெனரல் சரத் பொன்சேகாவை விடுதலை செய்யும் வரையில் ஆர்ப்பாட்டங்கள் தொடரும் என ஐக்கிய தேசியக் கட்சியின் பிரதித் தலைவர் கரு ஜயசூரிய தெரிவித்துள்ளார்.

கைது செய்யப்பட்ட சம்பவத்திற்கு எதிராக சத்தியாக்கிரக போராட்டம் ஒன்று நடத்தப்பட உள்ளதாகக் குறிப்பிட்டுள்ளார்.

மேலும், சட்டவிரோதமான முறையில் கைது செய்யப்பட்டுள்ளதாக தெரிவித்து நீதிமன்றில் அடிப்படை உரிமை மீறல் மனுவொன்றை தாக்கல் செய்ய உள்ளதாகவும் குறிப்பிடப்படுகிறது.

ஐக்கிய தேசியக் கட்சி, ஜனநாயக மக்கள் முன்னணி, ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சி மக்கள் பிரிவு, ஜே.வி.பி., ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸ் மற்றும் ஐக்கிய சோசலிஸ கட்சி ஆகியன இந்த எதிர்ப்பு போராட்டத்தில் கலந்து கொள்ளத் தீர்மானித்துள்ளன.

ஜனநாயகத்திற்கு ஏற்பட்டுள்ள அச்சுறுத்தலை வலியுறுத்தும் வகையில் இந்த எதிர்ப்பு போராட்டங்கள் முன்னெடுக்கப்படவுள்ளன.

0 kommentarer:

Post a Comment

உங்களுடைய கருத்தை தெருவிக்கவும்!

நீங்கள் உங்கள் கருத்தை எழுதும் பொழுது தயவுசெய்து முடிந்தவரை தமிழில் எழுதவும்.