Wednesday, February 10, 2010

போர்க் குற்றச் செயல்கள் தொடர்பிலான அவுஸ்திரேலிய அரசியல்வாதியின் கோரிக்கை நிராகரிப்பு

போர்க் குற்றச் செயல்கள் தொடர்பில் அவுஸ்திரேலிய நாடாளுமன்ற உறுப்பினர் ஜோன் மெர்ஸி விடுத்த கோரிக்கையை இலங்கை அரசாங்கம் நிராகரித்துள்ளது.

ஐக்கிய நாடுகளின் வழிகாட்டுதலின் பேரில் போர்க் குற்றச் செயல்கள் தொடர்பில் விசாரணை நடத்தப்பட வேண்டுமென ஜோன் மெர்ஸி கோரிக்கை விடுத்திருந்தார்.

எனினும், இந்தக் கோரிக்கையை ஏற்றுக்கொள்ள முடியாது என இலங்கை அரசாங்கம் அறிவித்துள்ளதாக திவயின பத்திரிகை செய்தி வெளியிட்டுள்ளது.
இலங்கையின் உள்விவகாரங்களில் தலையீடு செய்ய அவுஸ்திரேலிய நாடாளுமன்ற உறுப்பினருக்கு எவ்வித அருகதையும் கிடையாதென அராசங்கம் சுட்டிக்காட்டியுள்ளது.
ஐக்கிய நாடுகளோ அல்லது வேறும் அமைப்புக்களோ இலங்கை விவகாரங்கள் தொடர்பில் விசாரணை நடத்த அனுமதி அளிக்கப்பட மாட்டாது என தெரிவிக்கப்பட்டுள்ளது.

0 kommentarer:

Post a Comment

உங்களுடைய கருத்தை தெருவிக்கவும்!

நீங்கள் உங்கள் கருத்தை எழுதும் பொழுது தயவுசெய்து முடிந்தவரை தமிழில் எழுதவும்.