Wednesday, February 10, 2010

இராணுவத்திலிருந்து ஒய்வு பெற்றவருக்கு இராணுவ நீதிமன்றில் தண்டனை வழங்க முடியாது: திஸ்ஸ அத்தநாயக்க

இராணுவ சேவையிலிருந்து ஓய்வு பெற்ற ஒருவருக்கு இராணுவ நீதிமன்றில் தண்டனை வழங்க முடியாது என ஐக்கிய தேசியக் கட்சியின் பொதுச் செயலாளர் திஸ்ஸ அத்தநாயக்க தெரிவித்துள்ளார்.

இதனை ஓர் கைது செய்யும் நடவடிக்கை என கருதப்பட முடியாது எனவும், ஓர் கடத்தலாகவே நோக்கப்பட வேண்டும் எனவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.

லக்பிம பத்திரிகைக்கு அளித்த விசேட செவ்வியின் போது அவர் இதனைக் குறிப்பிட்டுள்ளார்.

சிவில் சட்டத்தின் அடிப்படையில் குற்றச் சாட்டுக்கள் விசாரிக்கப்பட வேண்டுமென அவர் தெரிவித்துள்ளார்.

இந்த கைது நடவடிக்கை தொடர்பில் உயர் நீதிமன்றில் வழக்குத் தொடரப்பட உள்ளதாகவும், இந்த விடயம் தொடர்பில் சர்வதேச சமூகத்திற்கு தெளிவுபடுத்தப்படவுள்ளதாகவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.

0 kommentarer:

Post a Comment

உங்களுடைய கருத்தை தெருவிக்கவும்!

நீங்கள் உங்கள் கருத்தை எழுதும் பொழுது தயவுசெய்து முடிந்தவரை தமிழில் எழுதவும்.