Wednesday, February 24, 2010

வெளிநாடுகளிலிருந்து இலங்கைக்கு செல்லும் தமிழர்களிடம் பணம் பறிக்கும் இலங்கை புலனாய்வுத்துறையினர்

வெளிநாடுகளிலிருந்து இலங்கைக்கு செல்லும் தமிழ் மக்களை கண்காணிப்பதற்கென கட்டுநாயக்கா விமானநிலையத்தில் இலங்கை புலனாய்வுத்துறையினர் நிறுத்திவைக்கப்பட்டுள்ளதாக செய்திகள் வந்துள்ளன.

கட்டுநாயக்கா விமானநிலையத்தில் வந்திறங்கி வெளியில் செல்லும் மக்களிடம் புலனாய்வுத்துறையினர் பணம் பறிப்பதாகவும் சிலரை தனி அறையில் விசாரிக்கவென கூட்டிச்சென்று பல லச்சம் ரூபைகள் தருமாறு அச்சுறுத்துவதாகவும் தெரியவந்துள்ளது.

இலங்கைக்கு சென்ற பலர் பல லச்சம் ரூபாய்களை புலனாய்வுத்துறையினருக்கு கொடுத்தே வெளியில் செல்ல அனுமதிக்கப்பட்டுள்ளதாக தெரியவந்துள்ளது.

இது தொடர்பாக எமக்கு ஒரு தந்தையாரால் சில நாட்களுக்கு முன்பு ஒரு மின்னஞ்சல் அனுப்பப்பட்டிருந்தது.

அதில் குறிப்பிடப்பட்டுள்ளதாவது...

தனது மனைவி மற்றும் மகன்மார்கள் கடந்த மாதம் இலங்கைக்கு சென்றதாகவும் அதன் போது விமானநிலையத்தில் அவர்களை சோதனையிட்ட விமான நிலைய காவலர்கள் அவர்களை தனி அறையில் விசாரிக்கவென கூட்டிச்சென்று பல விதமாக விசாரிக்கப்பாட்டார்களெனவும்,அதையடுத்து தனது மனைவி அவரிடம் இருந்த 650 யூரோக்களை காவலர்களிடம் கொடுத்தவுடன் அவர்களை வெளியில் செல்ல அனுமதித்திருந்தனர் என்று அவர் எமக்கு மின்னஞ்சல் மூலம் தெரிவித்திருந்தார்.

இதை இணையத்தில் வெளியிடும் படியும் தமிழர்கள் தற்போதைக்கு இலங்கைக்கு செல்ல வேண்டாம் குறிப்பாக இளைஞர்கள்,யுவதிகள் செல்லவேண்டாம் என்று எழுதியிருந்தார்.

0 kommentarer:

Post a Comment

உங்களுடைய கருத்தை தெருவிக்கவும்!

நீங்கள் உங்கள் கருத்தை எழுதும் பொழுது தயவுசெய்து முடிந்தவரை தமிழில் எழுதவும்.