Wednesday, February 24, 2010

இலங்கையின் போர்க்குற்றங்கள் தொடர்பில் விசாரணைகள் நடத்தப்படவேண்டும்: பிரித்தானியா

இலங்கையில் படையினராலும் தமிழீழ விடுதலைப்புலிகளாலும் மேற்கொள்ளப்பட்ட போர் குற்றங்கள் தொடர்பில் விசாரணைகள் நடத்தப்படவேண்டும் என பிரித்தானிய வெளியுறவு செயலாளர் டேவிட் மிலிபான்ட் இன்று லண்டனில் நடைபெற்ற உலக தமிழ் மாநாட்டில் பங்கேற்று உரையாற்றிய போது இந்த கோரிக்கையை முன்வைத்தார்.

அத்துடன் இலங்கையின் இனப்பிரச்சினையை தீர்க்க அரசாங்கம், அதிகாரப் பகிர்வை முன்வைக்க வேண்டும் என்றும் அவர் கேட்டுக்கொண்டார்.

இதேவேளை, சிறுவர்களை போரில் ஈடுபடுத்தியதன் மூலம் தமிழீழ விடுதலைப்புலிகள், வன்முறைகளை ஏற்படுத்தியதாகவும் அவர் குற்றம் சுமத்தினார்.

இதற்கிடையில், மிலிபான்ட்டின் உரை தொடர்பாக கருத்துரைத்துள்ள, இலங்கையில் உள்ள பிரித்தானிய உயர்ஸ்தானிகரக பேச்சாளர் ஒருவர், உலக தமிழ் மாநாட்டில் பங்கேற்ற டேவிட் மிலிபான்ட் இலங்கையில் அரசியல் தீர்வே இறுதியான தீர்வுக்கு வழிவகுக்கும் எனக் குறிப்பிட்டுள்ளதாக தெரிவித்துள்ளார்.

அந்த தீர்வு எப்படியானதாக இருக்க வேண்டும் என்பதை அனைத்து இலங்கை மக்கள்தான் முடிவு செய்ய வேண்டும் என்றும் அவர் கூறியுள்ளார்.

இந்த இலக்குக்காக செயற்படுகின்ற இலங்கையின் அனைத்து மக்களுடனும், அவர்கள் இலங்கையிலோ அல்லது வெளிநாட்டிலோ எங்கு இருந்தாலும் அவர்களுடன் சேர்ந்து பிரிட்டன் சேர்ந்து செயற்படும் என்றும் மிலிபாண்ட் அவர்கள் உலகத் தமிழர் பேரவையின் கூட்டத்தில் பேசியுள்ளார்.

அத்துடன் இன்னமும் இடம்பெயர்ந்தோர் முகாம்களில் எஞ்சியுள்ள மக்கள் மீள் குடியேற்றப்படுவதுடன், கைது செய்யப்பட்டு தடுத்து வைக்கப்பட்டிருக்கும் விடுதலைப்புலிகள் அமைப்பின் உறுப்பினர்கள் விடுததலை செய்யப்பட்டு, மறுவாழ்வளிக்கப்பட வேண்டும் என்றும் டேவிட் மிலிபாண்ட் கூறியுள்ளார்.

பிரித்தானியா, இலங்கையில் சிங்கள, தமிழ் முஸ்லிம் மக்கள், பேச்சுவார்த்தையின் மூலம் நல்லிணக்கம் ஒன்றை காணவேண்டும் என்ற நோக்கத்தையே கொண்டிருப்பதாகவும் பேச்சாளர் குறிப்பிட்டுள்ளார்.

இது இவ்வாறிருக்க, டேவிட் மிலிபான்ட். இன்றைய உலக தமிழ் மாநாட்டில் பங்கேற்பதற்கு இலங்கை தமது ஆட்சேபனையை தெரிவித்திருந்தது.

இலங்கையின் பிரித்தானிய உயர்ஸ்தானிகரிடம் அமைச்சர் ரோஹித்த போகல்லாகம தமது ஆட்சேபனையை வெளியிட்டிருந்தார்.

இந்த மாநாடு, தமிழீழ விடுதலைப்புலிகளின் ஆதரவாளர்களால் நடத்தப்படுவதாக அவர் குறிப்பிட்டிருந்தார்.

0 kommentarer:

Post a Comment

உங்களுடைய கருத்தை தெருவிக்கவும்!

நீங்கள் உங்கள் கருத்தை எழுதும் பொழுது தயவுசெய்து முடிந்தவரை தமிழில் எழுதவும்.