Wednesday, February 24, 2010

தமிழ் தேசிய கூட்டமைப்பு மட்டக்களப்பில் இன்று வேட்புமனுத் தாக்கல்

எதிர்வரும் பொதுத்தேர்தலில் போட்டியிட மட்டக்களப்பு மாவட்டத்தில் தமிழ் தேசிய கூட்டமைப்பு நியமனப்பத்திரம் தாக்கல் செய்ததாக மாவட்டத் தெரிவத்தாட்சி அலுவலர் சுந்தரம் அருமைநாயகம் தெரிவித்தார்.

இலங்கை தமிழரசுக் கட்சியின் முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர் பொன். செல்வராசா தலைமையில் தமிழ் தேசிய கூட்டமைப்பு வேட்பாளர் நியமனப்பத்திரத்தை தாக்கல் செய்தது.

இக்கட்சியின் முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர்களான பா.அரியநேத்திரன், கே.சௌந்தரராஜா, இளைப்பறிய வங்கி உத்தியோகத்தர் கே.ஆறுமுகம், சட்டத்தரணி ரீ.சிவநாதன், இளைப்பாறிய அதிபர் எஸ்.சத்தியநாதன், இளைஞர் சேவை அதிகாரி எஸ்.யோகேஸ்வரன், ரெலோ உறுப்பினர் இந்திரகுமார் நித்தியானந்தம் ஆகியோரும் போட்டியிடுகின்றனர்.

அம்பாறை மாவட்டத்தில் தமிழ் தேசிய கூட்டமைப்பில் போட்டியிடுவதற்காக முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர் டாக்டர் தோமஸ் வில்லியம் தலைமையில் தாக்கல் செய்யப்பட்டுள்ள வேட்பாளர் பட்டியலில் மற்றுமொரு முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினரான சந்திரநேரு சந்திரகாந்தனும் இடம்பெற்றுள்ளார்.

0 kommentarer:

Post a Comment

உங்களுடைய கருத்தை தெருவிக்கவும்!

நீங்கள் உங்கள் கருத்தை எழுதும் பொழுது தயவுசெய்து முடிந்தவரை தமிழில் எழுதவும்.