சரத் பொன்சேகாவின் மகளின் கணவரது தாயாரது பெயரின் கீழ் இந்த பணம் தனியார் வங்கி ஒன்றில் வைக்கப்பட்டிருந்ததாக தெரி விக்கப்படுகிறது தனது உறவினர் ஒருவரின் பெயரின் கீழ் வங்கி பாதுகாப்பு பெட்டகத்தில் சரத் பொன்சேகா வைத்திருந்த ஏழு கோடி ரூபாயை பொலிஸார் மீட்டுள்ளனர் என்று கொழும்பு தகவல்கள் தெரிவிக்கின்றன.
சரத் பொன்சேகாவின் மகளின் கணவரது தாயாரது பெயரின் கீழ் இந்த பணம் தனி யார் வங்கி ஒன்றில் வைக்கப்பட்டிருந்ததாக தெரி விக்கப்படுகிறது.பொலிஸ் மேற்கொண்ட தேடுதல் நடவடிக்கையின் பின்னர் இந்த பணம் மீட் கப்பட்டுள்ளதாகவும் மீட்கப்பட்ட பணத்தின் தொகை தற்போதைக்கு வெளியிடப்படமாட்டது என்றும் இது தொடர்பாக அறிவிப்பதற்கு விரைவில் ஊடகவியலாளர் மாநாடு ஒன்று நடத்தப்படும் என்றும் பொலிஸ் தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
தேசிய பாதுகாப்பு மையத்தில் விரைவில் நடைபெறவுள்ள ஊடகவியலாளர் மாநாட் டில் சரத் பொன்சேகாவின் ஏனைய சொத்து விபரங்களும் வெளியிடப்படும் என்றும் இந்த விபரங்கள் எதுவும் ஜனாதிபதித் தேர்தலில் போட்டி யிடுவதற்கு முன்னர் பொன்சேகா வெளியிட்ட தனது சொத்து விபரப்பட்டியலில் இடம்பெறவில்லை என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.







0 kommentarer:
Post a Comment
உங்களுடைய கருத்தை தெருவிக்கவும்!
நீங்கள் உங்கள் கருத்தை எழுதும் பொழுது தயவுசெய்து முடிந்தவரை தமிழில் எழுதவும்.