விடுதலைப்புலிகள் போரில் தோற்கடிக்கப்பட்டபோதும், தமிழீழ தனிநாடு என்ற அவர்களது திட்டம் தற்போதும் உயிர்ப்புடனே உள்ளதாக சிறிலங்கா இராணுவ தளபதி ஜெகத் ஜெயசூரியா தெரிவித்துள்ளார்.கிழக்கு மாகாணத்திலுள்ள கல்லடி தொப்பிகல வாகரை புனானை இராணுவ முகாம்களுக்கு சென்று இராணுவத்தினரை சந்தித்து உரையாற்றும்போதே இதனை அவர் தெரிவித்துள்ளார்.
தமிழீழ தனிநாட்டை அடைவதற்கான சாத்தியப்பாடுகள் பற்றி இப்போதும் புலத்து தமிழர்கள் மிகுந்த கவனம் செலுத்திவருவதாக தனக்கு தகவல் கிடைத்துள்ளதாக குறிப்பிட்டார்.
அதன் தொடர்ச்சியாகவே வடக்கு கிழக்கில் பெருந்தொகையான இராணுவத்தினர் நிலைப்படுத்தப்படுவதாக அவர் குறிப்பிட்டார். இப்படைபலப்படுத்தல் தாக்குதல் நடவடிக்கைகளை மேற்கொள்வதற்கு அல்ல என்றும் மாறாக புலனாய்வு தகவல்களை பெற்றுக்கொள்வதற்கே என்றும் அவர் மேலும் தெரிவித்தார்.






0 kommentarer:
Post a Comment
உங்களுடைய கருத்தை தெருவிக்கவும்!
நீங்கள் உங்கள் கருத்தை எழுதும் பொழுது தயவுசெய்து முடிந்தவரை தமிழில் எழுதவும்.