ஜே.வி.பி. என்ற மக்கள் விடுதலை முன்னணி ஜெனரல் சரத் பொன்சேகா தலைமையிலான ஜனநாயக தேசிய கூட்டணி என்ற புதிய கூட்டமைப்பை உருவாக்கியுள்ளது.இந்த கூட்டமைப்பில் கிண்ணம் சின்னத்தில் ஜே.வி.பி. எதிர்வரும் பொதுத் தேர்தலில் போட்டியிடவிருப்பதாக அறிவித்துள்ளது.
இந்த கூட்டமைப்புக்கு, ஸ்ரீலங்கா சுதந்திர கட்சியின் முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர் அர்ஜுன ரணதுங்க மற்றும் சுதந்திர கட்சியின் மக்கள் பிரிவு பொது செயலாளர் டிரான் அலஸ் ஆகியோர் ஆதரவு தெரிவித்துள்ளனர்.
ஐக்கிய தேசிய கட்சி யானை சின்னத்தில் போட்டியிட தீர்மானித்ததை அடுத்தே இந்த தீர்மானம் மேற்கொள்ளப்பட்டதாக அரசியல் வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.
தேர்தல் காலத்தின் போது புதிய அரசியல் கட்சி ஒன்று பதிவு செய்ய முடியாது என்பதினால், ஏற்கனவே உள்ள கட்சி ஒன்றின் பெயரே புதுப்பிக்கப்பட்டுள்ளது.
ஜனாதிபதி தேர்தல் நிறைவடைந்து பொதுத்தேர்தல் அறிவிக்கப்பட்டதன் பின்னர், ஜே வி பி அன்னச் சின்னத்தில் அனைத்து எதிர்கட்சிகளையும் ஒன்றிணைத்து போட்டியிட விரும்பியது.
எனினும் இதனை ஐக்கிய தேசிய கட்சி ஏற்க மறுத்து, யானைச் சின்னத்திலேயே போட்டியிட தீர்மானித்தது.
அதற்கு ஆரம்பத்தில் எதிர்ப்புகள் ஏற்படினும், பின்னர் ஜனநாயக மக்கள் முன்னிணியின் மனோ கணேசன் மற்றும் சிறிலங்கா முஸ்லிம் காங்கிரஸின் தலைவர் ரவூப் ஹக்கீம், ஸ்ரீலங்கா சுதந்திரக்கட்சியின் மக்கள் பிரிவின் தலைவர் மங்கள சமரவீர ஆகியோர் இணங்கினர்.
இதனை அடுத்தே, ஜே வி பி இந்த புதிய தீர்மானத்தை மேற்கொண்டுள்ளது.






0 kommentarer:
Post a Comment
உங்களுடைய கருத்தை தெருவிக்கவும்!
நீங்கள் உங்கள் கருத்தை எழுதும் பொழுது தயவுசெய்து முடிந்தவரை தமிழில் எழுதவும்.