தற்போது இந்தியாவில் உள்ள பாதுகாப்பு செயலாளர் கோத்தபாய ராஜபக்ஷ அங்கு பல்வேறு உயர்மட்டங்களை சந்தித்து வருவதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.
இதன் அடிப்படையில் வெளியுறவுத்துறை அமைச்சர் மற்றும் வெளியுறவுச் செயலாளர் ஆகியோரை இன்று சந்திப்பார் என கூறப்பட்டுள்ளது.
இந்தியாவில் நடைபெற்று வரும் கண்காட்சி ஒன்றுக்காக அவர் அங்கு சென்றுள்ளார். அவர் நாளைய தினம் நாடு திரும்புவதற்கு முன்னர், இந்த சந்திப்புகளை மேற்கொள்வார் என கூறப்படுகிறது.
எனினும் இந்த சந்திப்புகளுக்கான நோக்கங்கள் குறித்த தகவல்கள் எவையும் இதுவரையில் வெளியிடப்படாமல் இரகசியமாக பேணப்படுகிறது.
இந்தியாவுக்கான உயர்ஸ்தானிகர் பிரசாத் காரியவசமும், கோத்தபாய ராஜபக்ஷவுடன் உடனுள்ளார். அவரும் இந்த சந்திப்புகளில் கலந்து கொள்வதாக இந்திய செய்திகள் தெரிவிக்கின்றன.
ஏற்கனவே புத்தகாயாவுக்கு செல்ல கோத்தபாய திட்டமிட்டிருந்ததாக இந்திய ஊடகங்கள் செய்தி வெளியிட்டிருந்தன. எனினும் அந்த திட்டம் தற்போது கைவிடப்பட்டு, அரசியல் உயர்மட்டங்களை சந்திக்க திட்டமிட்டுள்ளதாக கூறப்படுகிறது.







0 kommentarer:
Post a Comment
உங்களுடைய கருத்தை தெருவிக்கவும்!
நீங்கள் உங்கள் கருத்தை எழுதும் பொழுது தயவுசெய்து முடிந்தவரை தமிழில் எழுதவும்.