Saturday, February 13, 2010

வன்னியில் நடைபெற்ற போரின் இறுதிக்கட்டத்தில் 40,000 பொதுமக்கள் கொல்லப்பட்டனர்: கோடன் வைஸ் சாட்சியம்.

வன்னிப்பகுதியில் நடைபெற்ற போரின் இறுதிக்கட்டத்தில் 40,000 பொதுமக்கள் கொல்லப்பட்டிருக்கலாம் என்பதை மோதல்கள் நடைபெற்ற பகுதிகளில் இருந்து கிடைக்கப்பெற்ற தகவல்களில் இருந்து அறிந்து கொள்ள முடிந்துள்ளதாக சிறீலங்காவுக்கான ஐக்கிய நாடுகள் சபையின் முன்னாள் பேச்சாளர் கோடன் வைஸ் தெரிவித்துள்ளதாக ஏபிசி செய்தி நிறுவனம் தெரிவித்துள்ளது.

அதன் உடகவியலாளர் எரிக் கம்பெல் தனது பத்தியில் மேலும் தெரிவித்துள்ளதாவது: வன்னிப்பகுதியில் நடைபெற்ற போரின் இறுதிக்கட்டத்தில் அங்கு 40,000 பொதுமக்கள் கொல்லப்பட்டிருக்கலாம் என்பதை மோதல்கள் நடைபெற் பகுதிகளில் இருந்து கிடைக்கப்பெற்ற தகவல்களில் இருந்து அறிந்து கொள்ள முடிந்துள்ளதாக சிறீலங்காவுக்கான ஐக்கிய நாடுகள் சபையின் முன்னாள் பேச்சாளர் கோடன் வைஸ் தெரிவித்துள்ளார்.

14 வருடங்கள் ஐக்கிய நாடுகள் சபையில் பணிபுரிந்த அவர் தற்போது தனது பணியில் இருந்து ஓய்வுபெற்று சொந்த நாடான அவுஸ்திரேலியாவுக்கு வந்துள்ளார். தற்போது சிறீலங்காவின் நிலை தொடர்பாக அவரால் சுதந்திரமாக பேச முடியும். சிறீலங்காவில் நடைபெற்ற போரின் இறுதிக்கட்டத்தில் 10,000 தொடக்கம் 40,000 பொதுமக்கள் கொல்லப்பட்டதாக என்னிடம் வைஸ் தெரிவித்துள்ளார்.

உலகிலேயே மிகவும் நீண்டகாலம் நடைபெற்ற உள்நாட்டு போரில் இதுவும் ஒன்று.நியூயோர்க் நகரத்தில் உள்ள மத்திய பூங்கா பகுதியளவு பிரதேசத்திற்குள் 300,000 பொதுமக்களும், விடுதலைப்புலிகளும் முடக்கப்பட்டனர்.
இராணுவம் பயன்படுத்திய எல்லா ஆயுதங்களின் தூரவீச்சுக்குள்ளும் அவர்கள் அகப்பட்டிருந்தனர். சிறிய ஆயுதங்கள், கனரக ஆயுதங்கள் என எல்லா ஆயுதங்களும் அவர்களை தாக்கும் தூரத்தில் தான் இருந்தன.விடுதலைப்புலிகளை அழிப்பதற்கு படையினர் எல்லா ஆயுதங்களையும் பயன்படுத்தியிருந்தனர்.

அதன் மூலம் பல ஆயிரம் பொதுமக்கள் படுகொலை செய்யப்பட்டிருந்தனர். என கோடன் வைஸ் தெரிவித்தார்.தனக்கு கிடைத்த இந்த தகவல்கள் நம்பகமாக வட்டாரங்களில் இருந்து கிடைத்ததாக அவர் தெரிவித்துள்ளார். தகவலை தந்தவர் களத்தினுள் நின்றவர் ஆனால் போரளியும் அல்ல, பொதுமகனுமல்ல.சிறீலங்கா தெரிவித்துவந்த பெருமளவான தகவல்கள் அனைத்துலகத்தை திசைதிருப்புவதற்காக மேற்கொள்ளப்பட்டவை, அல்லது அது பொய்யான தகவல்கயையே வழங்கி வந்துள்ளதாக வைஸ் என்னிடம் தெரிவித்தார்.

அரசு போரை நிறைவுசெய்வதற்கு வசதியாக பாதுகாப்பு வலையத்திற்குள் சிக்கியிருந்த மக்களின் தொகையை தாம் குறைத்து கூறியதாக போர் நிறைவுபெற்ற பின்னர் மூத்த அரச அதிகாரி ஒருவர் மனம் திறந்து பேசும்போது வைஸ் இடம் தெரிவித்திருந்தார்.

மக்களை வெளியேறவிடாது தடுப்பதற்காக விடுதலைப்புலிகளும் மக்கள் மீது துப்பாக்கி பிரயோகத்தை மேற்கொண்டிருந்தனர்.சிறீலங்காவில் இருந்து கப்பல் மூலம் அவுஸ்திரேலியாவுக்கு வர எத்தனித்த பின்னர் கைதுசெய்யப்பட்ட தமிழ் மக்களுடனும் நான் பேசியிருந்தேன். அவர்கள் மீது குற்றங்கள் சுமத்தப்பட்டுள்ள போதும், தாம் மீண்டும் அவுஸ்திரேலியாவுக்கு செல்லவுள்ளதாக ஒருவர் என்னிடம் தெரிவித்தார்.

தான் சிறீலங்காவில் மேலும் வாழ்வதற்கு விரும்பவில்லை என அவர் மேலும் தெரிவித்துள்ளார்.தமிழ் மக்களை படுகொலை செய்துள்ளதை மறுத்துவரும் மகிந்தா ராஜபக்சா அகதிகளாக அவுஸ்திரேலியாவுக்கு செல்பவர்களை குற்றவாளிகளாக கூறிவருகிறார். விடுதலைப்புலிகள் அழிக்கப்பட்டதும், தமிழ் மக்களின் பிரச்சனைகள் தீர்ந்துவிட்டதாக அவர் தெரிவித்துள்ளார்.

ஆனால் தமிழ் மக்கள் தமது வீடுகளில் இருந்து வெளியேறிவருகின்றனர், அவர்களின் குடும்ப உறுப்பினர்களும், நண்பர்களும் அவுஸ்திரேலியாவை நோக்கி ஆபத்தான பயணத்தை மேற்கொண்டு வருகின்றனர். எனவே சிறீலங்காவில் உண்மையான ஒருமைப்பாடு தோன்றுவதற்கு நீண்டகாலம் எடுக்கும் என்பதற்கு இதுவே ஒரு சிறந்த எடுத்துக்காட்டு என கம்பல் தனது பத்தியில் மேலும் தெரிவித்துள்ளார்.

0 kommentarer:

Post a Comment

உங்களுடைய கருத்தை தெருவிக்கவும்!

நீங்கள் உங்கள் கருத்தை எழுதும் பொழுது தயவுசெய்து முடிந்தவரை தமிழில் எழுதவும்.