ஜே.வி.பியின் முக்கிய பிரமுகர்களை கைது செய்வதற்கு சிறீலங்கா திட்டமிட்டுள்ளதாக ஜே.வி.பி வட்டாரங்கள் நேற்று தெரிவித்துள்ளன.
இது தொடர்பில் அவை மேலும் தெரியவருவதாவது:
ஜே.வி.பியின் முக்கிய உறுப்பினர்களை உடனடியாக கைது செய்வதற்கு அரசு நடவடிக்கைகளை மேற்கொண்டு வருவதை தொடர்ந்து, ஜே.வி.பி வட்டாரங்கள் கட்சியின் சட்டவாளர்களுடன் நேற்று ஆலோசனைகளை மேற்கொண்டுள்ளனர்.
மகிந்த அரசு, ஜே.வி.பியின் முக்கிய உறுப்பினர்களை கைது செய்தால் அரசுக்கு எதிராக என்ன நடவடிக்கைகளை மேற்கொள்வது என்பது தொடர்பில் இதன் போது கலந்தாலோசிக்கப்பட்டுள்ளதாக கட்சியின் உறுப்பினர்கள் தெரிவித்துள்ளனர்.
ஜே.வி.பியின் முக்கிய பிரமுகர்கள் விரைவில் கைது செய்யப்படவுள்ளதாக அரச தரப்பு அமைச்சர்கள் வெளிப்படையாகவே தெரிவித்து வருகின்றனர்.
இந்தநிலையில் சரத் பொன்சேகாவின் மீது அரசு மேற்கொண்ட நடவடிக்கைகளை நோக்கும் போது தமது கட்சி உறுப்பினர்கள் கைது செய்யப்படுவது ஆச்சரியமானது அல்ல என ஜே.வி.பி உறுப்பினர் ஒருவர் தெரிவித்துள்ளார்.
எமது உறுப்பினர்களை கைது செய்யும் நடவடிக்கைகளை அரசு மேற்கொள்ளப்போகின்றது என்பது உறுதியாக தெரிந்தால் அது தொடர்பில் நாம் வெளிநாட்டு தூதரகங்களுக்கு தெரியப்படுத்துவோம் என அவர் மேலும் தெரிவித்துள்ளார்.







0 kommentarer:
Post a Comment
உங்களுடைய கருத்தை தெருவிக்கவும்!
நீங்கள் உங்கள் கருத்தை எழுதும் பொழுது தயவுசெய்து முடிந்தவரை தமிழில் எழுதவும்.