வடக்கு யுத்த நடவடிக்கைகளின் போது 650 மில்லியன் ரூபா பெறுமதியான தங்க ஆபரணங்களை படையினர் மீட்டுள்ளதாகத் தெரிவிக்கப்படுகிறது.
குறித்த தங்க ஆபரணங்களை தமிழீழ விடுதலைப் புலிகள் பேணிப் பாதுகாத்து வந்ததாகக் குறிப்பிடப்படுகிறது.
பொதுமக்களுக்கு சொந்தமான ஆபரணங்களை புலிகள் வைத்திருந்ததாகவும், அதனை இராணுவ நடவடிக்கைகளின் போது படையினர் மீட்டுள்ளதாகவும் தெரிவிக்கப்படுகிறது.
மீட்கப்பட்ட சகல தங்க ஆபரணங்களும் இலங்கை வங்கி மற்றும் மக்கள் வங்கியிடம் ஒப்படைக்கப்பட்டுள்ளதாகத் தெரிவிக்கப்படுகிறது.
மீட்கப்பட்ட நகைகளுடன் உரிமையாளர்களின் பெயர் விபரங்களும் இணைக்கப்பட்டுள்ளன.
618 மில்லியன் பெறுமதியான தங்க ஆபரணங்கள் மக்கள் வங்கிக்கும், 40 மில்லியன் பெறுமதியான தங்க ஆபரணங்கள் இலங்கை வங்கிக்கும் வழங்கப்பட்டுள்ளது.
0 kommentarer:
Post a Comment
உங்களுடைய கருத்தை தெருவிக்கவும்!
நீங்கள் உங்கள் கருத்தை எழுதும் பொழுது தயவுசெய்து முடிந்தவரை தமிழில் எழுதவும்.