இன்று, நாளை என தேர்தல் அறிவிப்பு இழுபறியாகிப் போவதற்கு காரணம், இந்திய சோதிடர்களின் கணிப்பு இன்னமும் ஜனாதிபதி மஹிந்தவுக்கு கிடைக்காமையே என தகவல்கள் கிடைத்துள்ளன. ஜனாதிபதி தேர்தலா அல்லது பாராளுமன்ற பொது தேர்தலா முதலில் நடத்துவது என்று குழம்பிக் கொண்டிருக்கும் அரசாங்கம், அதற்கான ஆலோசனையை இந்திய சோதிடர்களிடம் கேட்டுத்தான் முடிவு செய்ய வேண்டுமாம்.
அதற்காக இந்தியா சென்றிருந்த மெர்வின் சில்வாவின் வருகைக்காகவே மஹிந்த காத்திருந்துள்ளார். மெர்வின் சில்வா நேற்று இரவே நாட்டுக்குத் திரும்பியுள்ளதை அடுத்தே சோதிடரின் கணிப்பின்படி நாளை எந்த தேர்தலை எப்போது நடத்துவது என்ற அறிவித்தல் வெளியாகவுள்ளதாம்.
இதன்படி, ஜனாதிபதித் தேர்தலே முதலில் நடைபெறும் என்பதை ஊர்ஜிதம் செய்யும் வகையில் நாளை திங்கட்கிழமை இரவு சுபவேளையில், மஹிந்த ராஜபக்ஷ அத்தேர்தலுக்கான திகதியை நாட்டு மக்களுக்கு உத்தியோக பூர்வமாக அறிவிக்கவுள்ளார். ஜனாதிபதித் தேர்தலுக்கு நியமனப் பத்திரங்களை தாக்கல் செய்யும் நாள் டிசம்பர் 14 ஆம் திகதியாக இருக்கும் என்றும் நம்பத்தகுந்த வட்டாரங்கள், ஜனாதிபதிக்கு நெருங்கிய வட்டாரங்கள் தெரிவித்ததாகவும் கூறப்பட்டுள்ளது.
மேலும், ஜனாதிபதித் தேர்தலை நாளை அறிவித்ததும் வெடிகொளுத்தி மகிழ்ச்சி ஆரவாரம் செய்யுமாறு ஸ்ரீலங்கா சுதந்திரக்கட்சியின் மாவட்ட அமைப்பாளர்களுக்கு பஸில் ராஜபக்ஷ பணிப்புரை விடுத்துள்ளதாகவும், நாளை மறுதினம் செவ்வாய்க்கிழமை விசேட அரசியல் தகவல் அறிக்கை ஒன்றை மஹிந்த வெளியிடவுள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
அந்த அரசியல் கொள்கை அறிக்கையில் ஜனாதிபதித் தேர்தல், ஏன் இரண்டு வருடங்களுக்கு முன்னதாக நடத்தப்படுகிறது என்பதற்கான விளக்கமான காரணம் மக்களுக்குத் தெரிவிக்கப்படுவதோடு மஹிந்தவின் ஜனாதிபதிகால வரலாறும் வெளியிடப்படவுள்ளது. அதாவது தேர்தலுக்கான பிரச்சார கொள்கையாக இது அமையப்போகிறது.
0 kommentarer:
Post a Comment
உங்களுடைய கருத்தை தெருவிக்கவும்!
நீங்கள் உங்கள் கருத்தை எழுதும் பொழுது தயவுசெய்து முடிந்தவரை தமிழில் எழுதவும்.