ஸ்ரீலங்கா அரசாங்கம் முன்னெடுத்துள்ள இடம்பெயர்ந்த மக்களை மீள் குடியேற்றும் நடவடிக்கைகள் குறித்து ஐக்கிய நாடுகள் சபை கவலை தெரிவித்துள்ளது.
எதிர் வரும் ஜனவரி மாதத்திற்குள் இடம்பெயர்ந்த மக்கள் அனைவரும் மீள் குடியேற்றப்டுவார்கள் என்ற அரசாங்கத்தின் அறிவிப்பு வரவேற்றக்கத்தகது என்றும் எனினும் மீள் குடியேற்றம் எவ்வாறு மேற்கொள்ளப்படுகின்றது என்பதை கண்காணிப்பது மிகவும் முக்கியமானது என்றும் ஐக்கிய நாடுகளின் மனிதாபிமான விவகாரங்களுக்கான உதவி செயலாளர் நாயகம் ஜோன் ஹோம்ஸ் தெரிவித்துள்ளார்.
மீள் குடியேற்றம் விரைவு படுத்தப்பட வேண்டும் என்பது அவசியமான போதிலும் மீள் குடியேற்றப்படும் மக்களின் அனைத்து மனிதாபிமான தேவைகளும் உரிய முறையில் பூர்த்தி செய்யப்படுவது அத்தியாவசியமானது என்றும் அவர் குறிப்பிட்டுள்ளார்.
விரைவான மீள் குடியேற்றம் என்பத மீள் குடியேற்ற நடவடிக்கைகளின் தரத்தை பாதிக்கும் வகையில் மேற்கொள்ளப்படுவதை ஏற்றுக் கொள்ள முடியாது என்றும் அவர் தெரிவித்துள்ளார்.
0 kommentarer:
Post a Comment
உங்களுடைய கருத்தை தெருவிக்கவும்!
நீங்கள் உங்கள் கருத்தை எழுதும் பொழுது தயவுசெய்து முடிந்தவரை தமிழில் எழுதவும்.