தமிழீழ விடுதலைப்புலிகள் தொடர்பில் இலங்கை அரசாங்கமும் அவர்களுடன் சேர்ந்து இயங்கும் துணை ஆயுதக்குழுக்களும் மேற்கொண்டுவரும் பிரசாரங்களை நம்பவேண்டாம் என தெரிவித்துள்ள தமிழீழ விடுதலைப்புலிகள் எதிர்வரும் மாவீரர் தின உரையில் தமிழீழ விடுதலைப்புலிகளின் கொள்கை விளக்கம் வழமைபோன்று இடம்பெறும் என தெரிவித்துள்ளனர்.
இது தொடர்பில் தமிழீழ விடுதலைப்புலிகள் விடுத்துள்ள அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளதாவது, அன்பார்ந்த தமிழீழ மக்களுக்கும் புலம்பெயர்வாழ் தமிழ் உறவுகளுக்கும் கடந்த 18-05-2009 அன்று தமிழீழ மக்களின் விடுதலைக்காக போராடிய எமது இயக்கம் பாரிய பின்னடைவை சந்தித்ததை தொடர்ந்து நாம் மீண்டும் எமது விடுதலை இயக்கத்தை தாயகத்தில் மீள கட்டியெழுப்பிவருவதை அறிந்த சிங்கள பேரினவாத அரசும் அரசுடன் சேர்ந்து இயங்கிவரும் அரச துணைகுழுக்களும் பொய்யான பிரசாரங்களை ஊடகங்கள் வாயிலாக கட்டவிழ்த்துள்ளனர்.
இவ்வாறான பிரசார போரை கடந்த முப்பது வருடங்கால போராட்ட வரலாற்றில் சிறிலங்கா அரசு பல தடவைகள் நிகழ்த்தியுள்ளது என்பதை நீங்கள் அறிவீர்கள்.
எனவே இவ்வாறான போலிப்பிரசாரங்களை நம்பவேண்டாம் என கேட்டுக்கொள்ளும் அதேவேளையில் எமது விடுதலைப்போராட்டத்தின் அடுத்தக்கட்ட நகர்வு பற்றிய கொள்கை விளக்கவுரையும் வழமைபோன்று எதிர்வரும் மாவீரர் தினத்தன்று நிகழ்த்தப்படும் என்பதை அறியத்தருகின்றோம்.என அந்த அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
0 kommentarer:
Post a Comment
உங்களுடைய கருத்தை தெருவிக்கவும்!
நீங்கள் உங்கள் கருத்தை எழுதும் பொழுது தயவுசெய்து முடிந்தவரை தமிழில் எழுதவும்.