Wednesday, November 18, 2009

தேசிய தலைவரின் புகைப்படக் கோப்புகள் கைப்பற்றப்பட்டுள்ளனவா?


தமிழீழ தேசிய தலைவரின் தனிப்பட்ட ஆல்பம், சில புகைப்படங்கள் உட்பட சில சீருடைகள் மற்றும் சில செய்மதி தொலைபேசிகள் கைப்பற்றப்பட்டுள்ளதாக குற்றப் புலனாய்வுப் பிரிவினர் இன்று தெரிவித்துள்ளனர். சேருநுவர பகுதியில் நடத்திய தேடுதலில் செய்மதி தொலைபேசிக்குப் பாவிக்கும் ஆன்டனா, 2 செய்மதி தொலைபேசிகள், சீருடைகள், மற்றும் தேசிய தலைவரின் புகைப்படங்கள் அடங்கிய ஆல்பம் உட்பட மேலும் சில பொருட்கள் கைப்பற்றப்பட்டதாகத் தெரிவிக்கப்படுகிறது.

இது தொடர்பாக அப்பகுதி முழுவதுமாக பல சுற்றிவளைப்புத் தேடுதல் நடத்தப்பட்டு வருவதாகவும் அங்கிருந்து வரும் தகவல்கள் தெரிவிக்கின்றன. தலைவரின் தனிப்பட்ட ஆல்பம் எவ்வாறு திருகோணமலைப் பகுதிக்கு கொண்டுவரப்பட்டது என்பது குறித்து பலத்த சந்தேகங்கள் எழுந்துள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.

0 kommentarer:

Post a Comment

உங்களுடைய கருத்தை தெருவிக்கவும்!

நீங்கள் உங்கள் கருத்தை எழுதும் பொழுது தயவுசெய்து முடிந்தவரை தமிழில் எழுதவும்.