இன்றைய தினம் நோர்வேயில் அமையவுள்ள ஈழத் தமிழர் அவைக்கான தேர்தல் இடம்பெறவுள்ளது. இந்த அவையானது இலங்கைத் தீவில் தமிழ் மக்களுக்கான அரசியல் தீர்வாக சுதந்திரமும் இறைமையும் உள்ள தமிழீழ தனியரசு ஒன்றை உருவாக்குவதற்காக உழைத்தல் என்ற உறுதியான கொள்கையை அடிப்படையாக கொண்டு உருவாக்கப்படுகின்றது.
இவ்வாறான கொள்கையுடன் நோர்வே நாட்டு சட்டங்களுக்கு உட்பட்டு உருவாக்கப்படும் மக்களவையின் தேர்தலில் பிராந்திர ரீதியாகவும் தேசிய ரீதியாகவும் வேட்பாளர்கள் போட்டியிடுகின்றனர். பிராந்திய ரீதியாக 9 வேட்பாளர்களில் ஒருவர் நோர்வேயிய இனத்தைச் சேர்ந்தவரார் என்பது குறிப்பிடத்தக்கது. இந்த
பிராந்திய ரீதியாக போட்டியிடும் 28 வேட்பாளர்களில் இருவர் நோர்வேயிய நாட்டை பூர்வீகமாக கொண்டவர்களாவர்.
மேற்படி தேர்தலில் போட்டியிடும் அனைத்து வேட்பாளர்களும் மக்களவைக்காக உருவாக்கப்பட்டுள்ள யாப்பில் குறிப்பிடப்பட்டுள்ள முக்கிய குறிக்கோள்களான சுதந்திரமும் இறைமையும் உள்ள தமிழீழ தனியரசு உருவாக்க குரல் கொடுத்தல் என்ற குறிக்கோள் உட்பட முக்கிய மூன்று குறிக்கோள்ளையும் ஏற்றுக் கொண்டு அதற்காக அற்பணிப்புடன் உழைப்போம் என்ற சம்மதத்தின் அடிப்படையில் போட்டியிடுகின்றனர்.
தமிழீழ தனியரசு உருவாக்கத்திற்காக கடந்த 30 ஆண்டுகளாக இடம் பெற்ற அளப்பரிய தியாகங்கள் மற்றும் சிங்கள பௌத்த பேரினவாதம் மேற்கொண்டு வந்த இன அழிப்பு நடவடிக்கைகள் என்பன காரணமாக தமிழ் மக்களுக்கு சுதந்திரமும் இறைமையும் உள்ள தமிழீழ தனியரசு உருவாக்கப்பட்டே ஆகவேண்டும் என்ற யதார்த்தத்தினையும் உண்மையினையும் ஏற்றுக் கொண்டு நோர்வே நாட்டவர்களும் இந்த அமைப்பில் போட்டியிடுகின்றனர்.
மக்கள் பங்களிப்புடன் ஐனநாயக ரீதியாக உருவாக்கப்படும் இந்த மக்களவையானது நோர்வேயில் வாழும் ஈழத் தமிழ் மக்களின் அரசியல் வேணவாவினை சர்வதேசத்திற்கு ஒரே குரலாக அமையும் என்பதுடன் தமிழீழ தனியரசு கொள்கைக்கு ஆதரவாக நோர்வே நாட்டவர்களை அணிதிரட்டும் பலம்மிக்க சக்கதியாகவும் செயற்படும்.
எனவே இந்த மக்களவையின் உருவாக்கத்திற்கு நோர்வேயில் வாழும் அனைத்து ஈழத் தமிழ் மக்களையும் வாக்களித்து தமிழீழ தனியரசு என்ற உங்கள் அரசியல் வேணவாவினை மீண்டும் ஒரு தடவை உலகுக்கு வெளிப்படுத்த முன்வருமாறு அன்புடன் வேண்டுகின்றோம்.
0 kommentarer:
Post a Comment
உங்களுடைய கருத்தை தெருவிக்கவும்!
நீங்கள் உங்கள் கருத்தை எழுதும் பொழுது தயவுசெய்து முடிந்தவரை தமிழில் எழுதவும்.