இலங்கையில் வாழும் அனைத்து இன மக்களும் நன்மையுடையும் விதமான அரசியல் தீர்வு ஒன்று முன்வைக்கப்பட வேண்டும் என்று இந்தியா தெரிவித்துள்ளது.
இலங்கைக்கு விஜயம் செய்த இந்திய நிதி அமைச்சர் பிரணாப் முகர்ஜி இந்த தகவலை வெளியிட்டுள்ளார்.
இலங்கையின் ஆட்சி அதிகாரத்தில் மாறி மாறி அமரும் சிங்கள ஆட்சியாளர்களால் பறிக்கப்பட்ட தமிழர்களின் உரிமைகளை மீளப் பெறும் போராட்டமே இலங்கையில் நடைபெற்று வருகின்றது என்பதை பிராணப் முகர்ஜி தெளிவாக மறந்து விட்டுள்ளார் என அரசியல் ஆய்வாhள் ஒருவர் சுட்டிக்காட்டியுள்ளார்.
தாங்கள் அனுபவிக்கும் உரிமைகள தமிழர்களுக்கு வழங்க மறுக்கும் சிங்களவர்களை திருப்திப்படுத்தும் தீர்வினையே இந்திய அரசாங்கம் ஏற்படுத்த முனைவதை பிரணாப் முகர்ஜியின் இந்த கருத்து எடுத்துக் காட்டுவதாக அவர் குறிப்பிட்டுள்ளார்.
தமிழ் மக்களின் நியாயமான அரசியல் அபிலாசைகள் பூhத்தி செய்யப்படுவதற்கு இந்தியாவின் ஆளும் காங்கிரஸ் அரசாங்கம் ஒருபோதும் ஒத்துழைப்பு வழங்காது என்பதை இவரின் இந்த கருத்து தெளிவுபடுத்தியுள்ளதாகவும் அவர் சுட்டிக்காட்டினார்
0 kommentarer:
Post a Comment
உங்களுடைய கருத்தை தெருவிக்கவும்!
நீங்கள் உங்கள் கருத்தை எழுதும் பொழுது தயவுசெய்து முடிந்தவரை தமிழில் எழுதவும்.