Monday, October 05, 2009

ஐதேக உறுப்பினர் பாலித ரங்கே பண்டாரவின் மற்றுமொரு அலுவலகம் தீக்கிரை

[திங்கட்கிழமை, 05 ஒக்ரோபர் 2009]

ஐக்கிய தேசியக் கட்சியின் நாடாளுமன்ற உறுப்பினர் பாலித ரங்கே பண்டாரவின் வீடும், மாதம்பையிலுள்ள காரியாலயமும் இனந்தெரியாத நபர்களினால் தீயிட்டுக் கொளுத்தப்பட்டுள்ளன எனத் தெரிவிக்கப்படுகிறது. ஏற்கனவே இவரது இன்னுமொரு அலுவலகம் எரியூட்டப்பட்டமை குறிப்பிடத்தக்கது.

மாத்தரையிலிருந்து கொழும்பு திரும்பிக் கொண்டிருந்த வேளை, இவர் இணையத் தாளம் ஒன்றுக்கு இத்தகவலை வெளியிட்டிருந்தார்.

சிலாபம் மாதம்பை பிரதேசத்தில் அமைந்துள்ள அவரது வீடு மற்றும் காரியாலம் ஆகியனவே இவ்வாறு தீக்கிரையாக்கப்பட்டுள்ளன.

தமது வீட்டின் ஒரு பகுதியில் காரியாலயம் அமைக்கப்பட்டிருந்ததாகவும், காரியாலயத்தில் காணப்பட்ட பெறுமதி மிக்க பொருட்கள் சேதமடைந்துள்ளதாகவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.

கணினி மற்றும் முக்கிய ஆவணங்கள் அழிக்கப்பட்டுள்ளதாக அவர் தெரிவித்துள்ளார்.

தென் மாகாணசபைத் தேர்தல் பிரசார நடவடிக்கையில் ஈடுபட்டிருந்த வேளையில், இந்தச் சம்பவம் இடம்பெற்றுள்ளதாக அவர் குறிப்பிட்டுள்ளார்.

இந்தச் சம்பவம் தொடர்பில் சிலாபம் காவல்துறையினருக்குத் தாம் முறைப்பாடு செய்துள்ளதாக பாலித ரங்கே பண்டார தெரிவித்துள்ளார்.

இந்த வருடத்தில் எரியூட்டப்பட்ட இரண்டாவது அலுவலகம் இதுவென்றும் இதற்கு முன்னரும் ரங்கே பண்டாரவின் ஆனமடுவ காரியாலயம் தீக்கிரையாக்கப்பட்டுள்ளது என்றும் தெரிவிக்கப்படுகின்றது

0 kommentarer:

Post a Comment

உங்களுடைய கருத்தை தெருவிக்கவும்!

நீங்கள் உங்கள் கருத்தை எழுதும் பொழுது தயவுசெய்து முடிந்தவரை தமிழில் எழுதவும்.