செய்தியாளர்கள் மத்தியில் இன்று உரையாற்றிய அவர், பொதுமக்களை கடத்தி வருதல் மற்றும். எல்லைப் பாதுகாப்புக்கு அச்சுறுத்தலை ஏற்படு;த்தும் சம்பவங்களுக்கு அவுஸ்திரேலியா, மன்னிப்பு வழங்காது எனக் குறிப்பிட்டார்.
எந்த ஒருவரும் சட்டபூர்வமாக அகதி அந்தஸ்துக்கு உரித்துடையவர் இல்லை என கருதப்பட்டால் அவர் உடனடியாக இலங்கைக்கு திருப்பியனுப்பப்படுவார் எனக் குறிப்பிட்ட அவர் இதற்கு முன்னரும் இவ்வாறான நடவடிக்கைகள் எடுக்கப்பட்டதை சுட்டிக்காட்டியுள்ளார்.
கடந்த 12 மாதங்களாக இலங்கையில் இடம்பெற்ற யுத்தம் காரணமாகவே அங்கிருந்து மக்கள் அதிகளவில் புலம்பெயர்ந்துள்ளனர்.
இது ஐரோப்பாவிற்கும் பொதுவான பிரச்சினையாக காணப்படுகிறது, இந்தநிலையிலேயே நட்பு நாடான இந்தோனேசியாவுடன் கலந்துரையாடி இந்த சவாலை சமாளிக்க முடிவெடுத்ததாக கெவின் ரூட் குறிப்பிட்டுள்ளார்.
இந்தோனேசியாவுடன் இணைந்து இந்த பிரச்சினையை தொடர்ந்தும் கையாள தாம் தீர்மானித்துள்ளதாகவும் அவர் தெரிவித்துள்ளார்.
மலேசியாவும் இந்த விடயத்தில் தமது நாட்டுடன் சிறந்த முறையில் ஒத்துழைப்பு வழங்கி வருவதாகவும் கெவின் ரூட் சுட்டிக்காட்டியுள்ளார்.






0 kommentarer:
Post a Comment
உங்களுடைய கருத்தை தெருவிக்கவும்!
நீங்கள் உங்கள் கருத்தை எழுதும் பொழுது தயவுசெய்து முடிந்தவரை தமிழில் எழுதவும்.