எதிர்வரும் மார்ச் மாதத்தில் நடைபெறவிருக்கும் பொதுத் தேர்தலில் மூன்றில் இரண்டு பெரும்பான்மையைப் பெற்று அரசியலமைப்புக்கான திருத்தங்களை நிறைவேற்றுவதுதான் அரசின் திட்டம் எனவும் பேராசிரியர் மேலும் தெரிவித்தார்.
இந்த நிலைப்பாட்டைத்தான் அரசு இப்போது கொண்டிருப்பதாகத் தெரிவித்த அமைச்சர் விதாரன, எதிர்வரும் 2010 ஆண்டு ஜனவரியில் நடைபெறவிருக்கும் அரச தலைவர் பதவிக்கான தேர்தலில் இன நெருக்கடிக்கான தீர்வுத் திட்டம் ஒன்றையும் உள்ளடக்கியதாகவே தனது தேர்தல் பிரகடனத்தை மகிந்த ராஜபக்ச வெளியிடுவார் எனவும் குறிப்பிட்டார்.
அரச தலைவர் பதவிக்கான தேர்தலை எதிர்வரும் ஜனவரி மாதத்திலும் பொதுத் தேர்தலை அதனையடுத்து மார்ச் மாதத்திலும் நடத்துவதற்கு அரசு திட்டமிட்டு வருவதாகத் தெரிவிக்கப்பட்டிருந்தது.
"விடுதலைப் புலிகளை படைத்துறை ரீதியாக வெற்றிகொண்ட உடனடியாகவே அரசியல் தீர்வு யோசனை ஒன்றை அரசு சமர்ப்பிக்கவில்லை என்பதால் அதனை அரசு புறக்கணிப்பதாக கருதக் கூடாது" எனக் குறிப்பிடும் பேராசிரியர் விதாரன, அரசியல் தீர்வு யோசனை ஒன்றை முன்வைக்க வேண்டும் என உள்நாட்டில் மட்டுமன்றி இந்திய உட்பட அனைத்துலக ரீதியாகவும் பெரும் அழுத்தங்களுக்கு மகிந்த ராஜபக்ச உள்ளாகியுள்ளார்" எனவும் சுட்டிக்காட்டினார்.
"ஆனால், அரசியல் தீர்வை முன்வைப்பது என்பது ஒரு நீண்ட செயற்பாடாகும் இதனை விரைந்து மேற்கொண்டுவிட முடியாது" எனவும் சுட்டிக்காட்டிய அவர், 13 ஆவது திருத்த யோசனைகளில் காணப்படும் பலவீனங்களை தாம் அறிந்திருப்பதாகவும் தெரிவித்தார்.
"அனைத்துக் கட்சிகளின் பிரதிநிதிகள் குழுவின் மூன்று ஆண்டு கால செயற்பாடுகளின் மூலமாக தயாரிக்கப்பட்ட அறிக்கையின் சுருக்கம் அரச தலைவர் மகிந்த ராஜபக்சவிடம் ஓகஸ்ட் மாதத்தில் கையளிக்கப்பட்டது.
"இது தொடர்பான அரச தலைவரின் கருத்து என்ன என்பதை அறிந்துகொள்வதற்காக நாம் காத்திருக்கின்றோம். அதனை அறிந்துகொண்ட பின்னரே எமது அடுத்த கட்ட நகர்வு இடம்பெறும்" எனவும் அவர் தெரிவித்தார்.
0 kommentarer:
Post a Comment
உங்களுடைய கருத்தை தெருவிக்கவும்!
நீங்கள் உங்கள் கருத்தை எழுதும் பொழுது தயவுசெய்து முடிந்தவரை தமிழில் எழுதவும்.