[ஞாயிற்றுக்கிழமை, 20 செப்ரெம்பர் 2009]
சிறிலங்காவில் உயிரிழந்த இந்தியப் படையினரின் நினைவாக அமைக்கப்பட்ட நினைவுத் தூபி இந்தியாவின் அக்கறையின்மை காரணமாக பணிகள் முடிந்து ஒரு வருட காலமாகியும் திறக்கப்படவில்லை.
இந்திய அமைதிப் படை என்ற பேரில் 1987-1988 காலப் பகுதிகளில் சிறிலங்காவின் வடக்கு-கிழக்குப் பகுதிகளில் இந்தியப் படையினர் சேவையாற்றினர். விடுதலைப் புலிகளுடன் ஏற்பட்ட மோதலில் ஆயிரத்து 500-க்கும் மேற்பட்ட படையினரை இழந்தனர்.
அவர்களின் நினைவாக பத்தரமுல்ல பீலவத்தவில் உயிர்துறந்த சிறிலங்காப் படையினரின் நினைவுத் தூபிக்கு அருகாக மற்றொரு தூபி நிர்மாணிக்கப்பட்டது.
15 ஆவது சார்க் மாநாட்டிற்காக கொழும்புக்கு வருகை தந்திருந்த இந்தியப் பிரதமர் மன் மோகன் சிங் அதனைத் திறந்து வைப்பதாக ஏற்பாடுகள் செய்யப்பட்டிருந்தன. ஆனால் அது நடைபெறவில்லை.
தூபி கட்டப்பட்டுக் கொண்டிருந்த காலப்பகுதியில் அது குறித்து கொழும்பில் உள்ள இந்தியத் தூதுவர் அலோக் பிரசாத் பெரும் ஆர்வம் காட்டி வந்தார் என்றும் சார்க் மாநாட்டுக்கு வருகை தந்திருந்த இந்திய வெளிவிவகாரத் துறையின் அப்போதைய செயலாளர் சிவ்சங்கர் மேனன் மற்றும் தேசிய பாதுகாப்பு ஆலோசகர் எம்.கே.நாராயணன் ஆகியோர் அதனைப் பார்வையிட்டிருந்தனர் என்றும் பாதுகாப்பு அமைச்சு வட்டாரங்கள் தெரிவித்தன.
Sunday, September 20, 2009
இந்தியப் படையினரின் நினைவுத் தூபியை சிறிலங்காவில் திறப்பதில் புதுடில்லிக்கு அக்கறை இல்லை
Subscribe to:
Post Comments (Atom)
0 kommentarer:
Post a Comment
உங்களுடைய கருத்தை தெருவிக்கவும்!
நீங்கள் உங்கள் கருத்தை எழுதும் பொழுது தயவுசெய்து முடிந்தவரை தமிழில் எழுதவும்.