Saturday, September 19, 2009

செயற்கைக் கால் பொருத்தும் நடமாடும் சேவை மன்னாரில் இன்று ஆரம்பம்

[சனிக்கிழமை, 19 செப்ரெம்பர் 2009]

வன்னியில் இடம்பெற்ற யுத்தத்தின் காரணமாக கால்களை இழந்தவர்களுக்கான செயற்கைக் கால் பொருத்தும் இரண்டாம் கட்ட நடமாடும் சேவை இன்று சனிக்கிழமை மன்னார் பொது வைத்தியசாலையில் ஆரம்பித்து வைக்கப்பட்டுள்ளது.

மன்னார் ஆயர் பேரருட்திரு இராயப்பு ஜோசப் ஆண்டகை வேண்டுகோளின் பேரில், இதற்கென கொழும்பு நட்புறவு சங்கத்தின் ஏற்பாட்டில் லண்டனில் கடமையாற்றும் விசேட நிபுணர் குழு ஒன்று மன்னார் மாவட்ட பொது வைத்தியசாலைக்கு வரவுள்ளது.

வன்னியில் இடம்பெற்ற வவுனியா மற்றும் செட்டிக்குளம் நலன்புரி நிலையங்களில் வாழ்ந்து வந்த 200 பேர் செயற்கை கால் பொருத்துவதற்காக மன்னார் பொது வைத்தியசாலைக்கு அழைத்து வரப்பட்டுள்ளனர்.

முதல்கட்ட செயற்கைகால் பொருத்தும் நிகழ்வில் நூற்றுக்கு மேற்பட்டோர் பலனடைந்துள்ளமை குறிப்பிடத்தக்கது.

0 kommentarer:

Post a Comment

உங்களுடைய கருத்தை தெருவிக்கவும்!

நீங்கள் உங்கள் கருத்தை எழுதும் பொழுது தயவுசெய்து முடிந்தவரை தமிழில் எழுதவும்.