[ஞாயிற்றுக்கிழமை, 20 செப்ரெம்பர் 2009]
தேசிய இன ஒருமைப்பாட்டு அமைச்சர் விநாயகமூர்த்தி முரளிதரன் பயணித்த வாகனம் இன்று கொழும்பில் விபத்துக்குள்ளானதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
இதில் அமைச்சர் விநாயகமூர்த்தி முரளிதரனின் காலில் சிறிய அளவிலான முறிவு ஏற்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. எனினும் அவருடன் பயணித்த அவரின் செயலாளர்கள் இருவரும் காயமடைந்துள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
காயமடைந்த செயலாளர்கள் இருவரும் தற்போது கொழும்பு தேசிய வைத்தியாலையில் சிகிச்சைக்கு அனுமதிக்கப்பட்டுள்னர்.
இந்த விபத்து கொழும்பு கறுவாத்தோட்டம் பகுதியில் வைத்து, அவர் பயணித்த வாகனம் பேருந்து ஒன்றுடன் மோதியதன் காரணமாகவே இடம்பெற்றுள்ளது.
வவுனியாவில் இருந்து ஹெலிகொப்டர் மூலமாக கொழும்பு வந்து, இராணுவ மைதானத்தில் தரையிறங்கியதன் பின்னர், அவர் பயணித்த குண்டு துளைக்காத வாகனமே இவ்வாறு விபத்துக்கு உள்ளாகியுள்ளது.
0 kommentarer:
Post a Comment
உங்களுடைய கருத்தை தெருவிக்கவும்!
நீங்கள் உங்கள் கருத்தை எழுதும் பொழுது தயவுசெய்து முடிந்தவரை தமிழில் எழுதவும்.