Sunday, September 20, 2009

தமிழர்களுக்காக குரல் கொடுப்பது தேசத்துரோகமா?: மனோ கணேசன்


[ஞாயிற்றுக்கிழமை, 20 செப்ரெம்பர் 2009]

இந்நாட்டில் கடந்த நான்கு வருட காலத்தில் கடத்தப்பட்டு காணாமல் போயுள்ள தமிழர்களுக்காகவும் நீண்ட நெடுநாட்களாக சிறைச்சாலைகளிலும், பூஸா முகாமிலும் தடுத்துவைக்கப்பட்டுள்ள தமிழ் அரசியல் கைதிகளுக்காகவும் குரல் கொடுப்பது எவ்வாறு தேசத்துரோகமும், அரசியல் சதியும் ஆகுமென அரசாங்கம் விளக்க வேண்டும் என ஜனநாயக மக்கள் முன்னணித் தலைவர் மனோ கணேசன் எம்.பி. கேள்வியெழுப்பியுள்ளார்.

எதிர்க்கட்சி அரசியல்வாதிகளுடன் இணைந்து மனோ எம்.பி. அரசுக்கு எதிராக சதி செய்கிறார் என அமைச்சரவை பேச்சாளர் அநுரபிரியதர்சன யாப்பா தெரிவித்துள்ள கருத்து தொடர்பாக மனோ எம்.பி. விடுத்துள்ள பத்திரிகைச் செய்தியில் இவ்வாறு தெரிவிக்கப்பட்டுள்ளது.

மேலும் அந்த அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளதாவது:

எதிர்க்கட்சித் தலைவர் ரணில் விக்கிரமசிங்க, மங்கள சமரவீர எம்.பி., முன்னாள் ஜனாதிபதி சந்திரிகா பண்டாரநாயக்க ஆகியோருடன் சேர்ந்து நான் அரசுக்கு எதிராக சதி செய்வதாக அமைச்சர் யாப்பா குற்றம்சாட்டியுள்ளார்.

அவர் பெயர் குறிப்பிட்டுள்ள ஏனைய அரசியல்வாதிகள் அரசுக்கு எதிராக சதி செய்வதாக எனக்கு தோன்றவில்லை. எப்படியிருந்தாலும் அவர்கள் தொடர்பில் அவர்கள்தான் பதில் அளிக்க வேண்டும். என்னை பொருத்தவரையில் தமிழ் மக்களுக்கு எதிராக நிகழ்த்தப்படும் மனித உரிமை மீறல்களுக்கும், அடக்கு முறைகளுக்கும் எதிராக நானும், எனது கட்சியும் அன்றும், இன்றும் குரல் கொடுத்து வருகின்றோம்.

எமது குரல் தொடர்ந்தும் ஒலிக்கும். அரசாங்கத்தை வீழ்த்தும் அரசியல் சதி நோக்கம் எனக்கு கிடையாது. சதி என்றால் இரகசியமாக செய்ய வேண்டியதாகும். ஆனால் எங்களது செயற்பாடு வெளிப்படையானதாகும். இதில் அரசியல் நோக்கமும் கிடையாது.

0 kommentarer:

Post a Comment

உங்களுடைய கருத்தை தெருவிக்கவும்!

நீங்கள் உங்கள் கருத்தை எழுதும் பொழுது தயவுசெய்து முடிந்தவரை தமிழில் எழுதவும்.