Tuesday, May 19, 2009

விடுதலைப் புலிகளின் தலைவர் பிரபாகரன் உயிருடன் இருக்கிறார்: செ. பத்மநாதன் செவ்வி

[திங்கட்கிழமை, 18 மே 2009, 05:21.45 PM GMT] விடுதலைப் புலிகளின் தலைவர் பிரபாகரன் உயிருடன் இருக்கிறார் என பத்மநாதன் சனல் 4 தொலைக்காட்சிக்கு சற்று நேரத்திற்கு முன்னர் தெரிவித்துள்ளார். பிரித்தானியாவில் உள்ள பிரபல தொலைக்காட்சியான சனல் 4 க்கு அவர் வழங்கிய நேரலை செவ்வியின் போது பத்மநாதன் இவ்வாறு கூறியுள்ளார். கடந்த சில மணித்தியாலங்களாக, இலங்கை அரசும் அதனுடன் சேர்ந்து இயங்கும் கூலிப்படைகளும் தலைவர் இறந்ததாகவும் அவர் உடல் கொழும்புக்கு கொண்டுவரப்பட்டு பிரேதப்பரிசோதனை நடைபெறுவதாகவும் கதைகளை கட்டவிழ்த்து விட்டிருந்தனர். இதனையடுத்து ஜரோப்பியவாழ் தமிழர்கள் பெரும் மனச்சோர்வடைந்து குழப்பத்தில் காணப்பட்டனர். இந்த ஒட்டுக் குழுக்கள் தமது இணையத்தளம் மூலம் இப்பரப்புரைகளை மேற்கொண்டிருந்தனர். எனவே தமிழீழ உறவுகளே இலங்கை அரசின் கூலிப்படைகள் நடாத்தும் இணையங்களை சென்று பார்வையிடுவதை நிறுத்துங்கள். அவர்கள் சொல்வதெல்லாம் பொய், பொய்யைத் தவிர வேறொன்றும் இல்லை.

4 comments:

  1. இப்ப தான் கொஞ்சமாவது நிம்மதியா இருக்கு


    நெப்போலியன்.

    ReplyDelete
  2. பாதுகாப்பு காரணங்களுக்காக எங்கே என்று கூறமுடியாதுதானே

    ReplyDelete
  3. பத்மநாதனுக்குக் கிட்டவாத்தான் லண்டனில தான் இருக்கிறார். எங்க எண்டு சொல்லமாட்டன். ந்ம்ம்மதியா இருங்கோ.

    ReplyDelete
  4. தலைவர் பற்றிய செய்தியை நான் சிறிதளவேனும் நம்பவில்லை, ஆனால் நேற்றைய, ஞாயிறு கிழமை இளப்புக்கள் காலத்தாலும் ஆறாத துயரங்கள். இவ்வடுக்கள் ஆறவேண்டுமாயின் தமிழீழம் வெகுவிரைவில் மலரவேண்டும்.

    ReplyDelete

உங்களுடைய கருத்தை தெருவிக்கவும்!

நீங்கள் உங்கள் கருத்தை எழுதும் பொழுது தயவுசெய்து முடிந்தவரை தமிழில் எழுதவும்.