Tuesday, May 19, 2009

பாராளுமன்ற உரையில் பிரபாகரனைப்பற்றி வாய்திறக்காத ராஜபக்ச: நாளை தேசிய விடுமுறை தினமாக அறிவிப்பு

[செவ்வாய்க்கிழமை, 19 மே 2009,] இலங்கை அதிபர் மஹிந்த ராஜபக்ச இன்று நாடாளுமன்றத்தில் இன்று காலை 9.30 மணிக்கு நாடாளுமன்ற சபை ஆரம்பிக்கப்பட்டு 9.45 மணிக்கு சிறப்புரை ஆற்றினார்.

தமிழில் அவர் 5 நிமிடங்கள் பேசினார். அப்போது அவர், ‘’இலங்கையில் நடந்த போர் தமிழர்களுடனான போர் அல்ல; விடுதலைப்புலிகளுடனான போர். இப்போர் முடிவுக்கு வந்துவிட்டது’’ என்றார். ஆனால், விடுதலைப்புலிகளின் தலைவர் பிரபாகரன் மரணம் இன்னும் உறுதி செய்யப்படவில்லை. இது தொடர்பாக ராஜபக்ச எதுவும் தெரிவிக்கவில்லை. பாராளுமன்ற உரையில் பிரபாகரனைப்பற்றி எதுவுமே பேசவில்லை. பிரபாகரன் என்ற பெயரையே அவர் உச்சரிக்கவில்லை. நாளை தேசிய விடுமுறை தினமாகவும் அறிவிப்பு "இலங்கையின் பயங்கரவாதத்திலிருந்து நாட்டை விடுவித்தமையை உலகம் முழுவதும் கொண்டாட வேண்டும். நாட்டில் சிறுபான்மை என்ற பேச்சுக்கே இடமில்லை. இரண்டு தேசிய இனத்தைத் தவிர நாட்டில் வேறேதுமில்லை. அத்துடன் நாட்டிலுள்ள அனைத்து மக்களும் ஒன்றாக சமாதானத்துடன் ஒன்றுபட்டு வாழக்கூடிய சூழ்நிலை இன்று உருவாகியுள்ளது" என ஜனாதிபதி மஹிந்த ராஜக்பக்ஷ தெரிவித்தார். வெற்றியை முன்னிட்டு நாளைய தினம் தேசிய விடுமுறையாக ஜனாதிபதி தனது உரையில் அறிவித்துள்ளார். ஜனாதிபதி தமிழில் உரையாற்றும் போது, " இது எமது தாய் நாடு , நாம் அனைவரும் பிறந்த தாய்நாடு. நாம் அனைவரும் ஒருதாய் மக்களாக வாழ வேண்டும். இங்கே இன, மத, குல பேதம் இருக்கக் கூடாது. கடந்த 30 வருடங்களாக, ஏராளமான மக்கள் விடுதலைப் புலிகளால் கொல்லப்பட்டுள்ளனர். தமிழ், சிங்கள, முஸ்லிம் மக்கள் இவ்வாறு கொல்லப்பட்டுள்ளனர். விடுதலைப் புலிகளுடன் நாம் நடத்திய யுத்தம் தமிழ் மக்களுக்கு எதிராக நடத்திய யுத்தமல்ல. எமது நோக்கம் விடுதலை புலிகளிடமிருந்து எமது சகோதரர்களான தமிழ் மக்களைப் பாதுகாப்பதே. விடுதலைப் புலிகளிடம் இருந்து தமிழ் மக்களைப் பாதுகாப்பதற்காகவே படையினர் பலர் தமது உயிர்களைத் தியாகம் செய்துள்ளனர்.விடுதலை புலிகளுக்கு எதிரான யுத்தத்தில் நாம் இன்று பெற்றுள்ள வெற்றி முழு நாடும் பெற்றுக் கொண்ட வெற்றி; நாட்டில் வாழும் ஒவ்வொரு குடிமகனும் பெற்ற வெற்றி. நாட்டில் வாழும் தமிழ் மக்களைப் பாதுகாப்பது எனது கடமையும், பொறுப்பும் ஆகும். அவர்கள் பயமோ, அச்சமோ இன்றி சம உரிமையுடன் வாழ வேண்டும்.இது தான் எனது எதிர்பார்ப்பாக உள்ளது. நாம் எல்லோரும் ஒன்றிணைந்து சுதந்திரமடைந்த இந்நாட்டைக் கட்டியெழுப்புவோம்" எனத் தெரிவித்தார். தொடர்ந்து சிங்களத்தில் உரையாற்றிய ஜனாதிபதி, நாட்டுக்காக உயிர் நீத்த பாதுகாப்புப் படையினருக்கு மரியாதை செலுத்துவதாகவும், இந்நாட்டை விடுதலைப் புலிகளிடம் இருந்து விடுவிக்கத் தமது கணவன்மாரையும், மகன்மாரையும் அனுப்பி வைத்த அனைவருக்கும் இத்தருணத்தில் நன்றி தெரிவிப்பதாகவும் கூறினார். அத்துடன் யுத்தம் காரணமாக புலம்பெயர்ந்து வெளிநாடுகளில் வாழும் மக்கள் அனைவரும், நாட்டை அபிவிருத்தி பாதைக்கு இட்டுச் செல்வதற்கான தமது பங்களிப்பினை வழங்க நாட்டுக்கு மீண்டும் திரும்பி வருமாறும் ஜனாதிபதி அழைப்பு விடுத்தார்.

0 kommentarer:

Post a Comment

உங்களுடைய கருத்தை தெருவிக்கவும்!

நீங்கள் உங்கள் கருத்தை எழுதும் பொழுது தயவுசெய்து முடிந்தவரை தமிழில் எழுதவும்.