[செவ்வாய்க்கிழமை, 19 மே 2009,] இந்து சமுத்திரப் பிராந்தியத்தின் பூகோள முக்கியத்துவம் சார்நிலையில் முதன்மைபெறும் இந்தியாவுடன் இணைந்து, ஈழத்தமிழ்மக்கள் பிரச்சனைக்குத் தீர்வு காண விடுதலைப்புலிகள் விரும்புகின்றார்களென விடுதலைப்புலிகளின் சர்வதேச ராஜரீகத் தொடர்பாளர் பத்மநாதன் தெரிவித்துள்ளார். 'தமிழ்நெற்' இணையத்தளத்துக்கு இன்று அவர் வழங்கிய செவ்வியிலேயே இதனைக் குறிப்பிட்டுள்ளார். இச் செவ்வியில் அவர் தெரிவித்திருக்கும் கருத்துக்களின் சாராம்சத் தொகுப்பினைச் சுருக்கமாகத் தருகின்றோம். இந்தியாவிற்கும் ஈழத்தமிழமக்களுக்குமான சமூக கலாச்சார நெருக்கங்கள் அதிகமாகவிருப்பதனால், அவர்களோடு இனைந்து இப்பிரச்சினையை அணுகுவதில் தடையேதுமிருக்கப் போவதில்லை எனவும் குறிப்பிட்டார். இதன்படி தமிழக அரசியற் கட்சிகளுடன் இணைந்தும் செயற்பட முடியுமெனவும் குறிப்பிட்டார். தற்போது தமிழ்மக்களுக்கு ஏற்பட்டிருக்கக் கூடிய சூழ்நிலையானது மிகவும் துரதிஸ்டமானது. வன்னியில் நிகழ்ந்துள்ள இந்த இனப்படுகொலைகள் தமிழினத்திற்கு மிகப்பெரிய துயரத்தைக் கொடுத்திருக்கிறது. இதன் காரணமாக உலகெங்கும் பரந்து வாழும் தமிழமக்கள் ஒரு பொதுவேலைத்திட்டத்தில் இணைந்து பணியாற்றும் பக்குவத்தைத் தந்திருக்கிறது. இந்நிலையில் , சிங்களமக்களும், சிங்கள அரசும், தாம் பெற்றுக் கொண்ட இராணுவ வெற்றிகளின் அடிப்படையில் சிந்திப்பார்களானால், அது இனங்களுக்கிடையேயான சம அந்தஸ்தைப் பாதிக்கும். ஏற்கனவே அப்படியான நிலையினை அரசியல்வாதிகள் உருவாக்கி வைத்ததினால்தான், தமிழ்மக்கள் ஒடுக்கப்பட்ட மக்களாக உணரப்பட்டார்கள். அதனாலேயே போராடும் எண்ணம் பெற்றார்கள். இப்போதுள்ள சூழ்நிலையில் மீளவும் அப்படியானதொரு அவமரியாதைச் சூழ்நிலையைத் தோற்றுவிக்காதிருப்பது அவசியம். அப்படியானதொரு துர்ப்பாக்கிய நிலை மறுபடியும் வந்துவிடக் கூடாதென்பதே தற்போது விடுதலைப்புலிகள் அமைப்பினதும் தலமையினதும் அக்கறையும் கவலையுமாதகவுள்ளது. இந்த யுத்தத்தினால் சிங்கள அரசின் மீது தமிழ்மக்கள் ஒட்டு மொத்த நம்பிக்கையை இழந்திருக்கின்றார்கள். இழக்கபட்ட நம்பிக்கைகள் மீளக்கட்டியெழுப்பப்படுவது மிக மிக அவசியம். ஈழத்தமிழமக்களின் அரசியற் செயற்பாடுகளில், இப்போதிருக்கும் அமைப்புக்களும் தமிழர் நலன்கள் குறித்துப் பயனிக்கத் தொடங்கியவர்கள்தான். அதே சிந்தனையோட்டத்தில் அவர்கள் தொடர்ந்தும் பயணிப்பார்கள் என நம்புகின்றோம். நடந்து முடிந்த யுத்தத்தின் இறுதித் தருணங்களில், வெள்ளைக் கொடியோடு போனவிடுதலைப்புலிகளின் முக்கிய உறுப்பினர்கள் சிலர் கண்டூடித்தனமாகச் சுட்டுக் கொல்லப்பட்டுள்ளார்கள். விடுதலைப்புலிகளின் தலைவர் பிரபாகரன் தற்போது உயிரோடும் உடல்நலத்தோடும் இருக்கின்றார். அவருடனான தொடர்பைப் பேணும் ஒருவராக நான் மட்டுமே செயற்படுகின்றேன் என அவர் மேலும் தெரிவித்துள்ளார்.
Tuesday, May 19, 2009
Subscribe to:
Post Comments (Atom)
0 kommentarer:
Post a Comment
உங்களுடைய கருத்தை தெருவிக்கவும்!
நீங்கள் உங்கள் கருத்தை எழுதும் பொழுது தயவுசெய்து முடிந்தவரை தமிழில் எழுதவும்.