[சனிக்கிழமை, 02 மே 2009] முல்லைத்தீவு மாவட்டத்தில் உள்ள இரட்டைவாய்க்கால் பகுதியில் சிறிலங்கா படையினர் மேற்கொண்டு வரும் தொடர் முன்நகர்வுகளுக்கு எதிராக தமிழீழ விடுதலைப் புலிகள் தாக்குதல்களை மேற்கொண்டு வருகின்றனர். இன்றைய சண்டையில் 60 படையினர் கொல்லப்பட்டுள்ளனர். இது தொடர்பாக விடுதலைப் புலிகளின் வன்னி சமர் - கட்டளைப் பீடத்தை மேற்கோள் காட்டி 'புதினம்' செய்தியாளர் அங்கிருந்து தெரிவித்துள்ளதாவது: கடந்த நான்கு நாட்களாக சிறிலங்கா படையினர் வன்னியின் இரட்டைவாய்க்கால் வடக்குப் பகுதியில் விடுதலைப் புலிகளின் முன்னரண் பகுதியை உடைத்து - 'மக்கள் பாதுகாப்பு வலய' பகுதிக்குள் நுழைய அதிக பலத்துடன் தாக்குதல்களை மேற்கொண்டு வருகின்றனர். இதற்கு எதிராக - விடுதலைப் புலிகளின் படையணிகள் தொடர்ந்து மேற்கொள்ளும் தீவிரமான - அர்ப்பணிப்புடன் கூடிய - தாக்குதல்கள் படையினருக்கு பலத்த இழப்புக்களை ஏற்படுத்துகின்றன. இன்றைய சண்டைகளில் 60 படையினரும், நேற்று முன்நாள் இரவு தொடக்கம் நேற்று இரவு வரை நடந்த சண்டைகளில் 150 படையினரும், ஏப்ரல் மாதத்தின் இறுதி நான்கு நாட்களில் நடந்த சண்டைகளில் 600 வரையான படையினரும் கொல்லப்பட்டதாக தகவல்கள் தெரிவிக்கின்றன. இதேவேளையில் நேற்று முன்நாள் வரை, கடந்த நான்கு நாட்களாக இந்த முனையில் சிறிலங்கா படையினர் மேற்கொண்ட முன்நகர்வுகள் வெற்றியளிக்கவில்லை என கொழும்பு படைத்துறைச் செய்தியாளர் ஒருவர் தெரிவித்திருக்கின்றார்.
Saturday, May 02, 2009
Subscribe to:
Post Comments (Atom)
0 kommentarer:
Post a Comment
உங்களுடைய கருத்தை தெருவிக்கவும்!
நீங்கள் உங்கள் கருத்தை எழுதும் பொழுது தயவுசெய்து முடிந்தவரை தமிழில் எழுதவும்.