[சனிக்கிழமை, 02 மே 2009] முல்லைத்தீவு மாவட்டத்தின் முள்ளிவாய்க்கால் பகுதியில் உள்ள தற்காலிக மருத்துவமனை மீது சிறிலங்கா படையினர் இன்று நடத்திய எறிகணைத் தாக்குதல்களில் நோயாளர்கள் உட்பட 63 பேர் படுகொலை செய்யப்பட்டுள்ளதுடன் 87 பேர் காயமடைந்துள்ளனர். மக்கள் பாதுகாப்பு வலயமான முள்ளிவாய்க்காலில் தற்காலிகமாக இயங்கிவந்த முல்லைத்தீவு பொதுமருத்துவமனை மீது இன்று சனிக்கிழமை காலை 7:00 மணி தொடக்கம் 9:20 நிமிடம் வரை சிறிலங்கா படையினர் எறிகணைத் தாக்குதல்களை அகோரமாக நடத்தியதாக 'புதினம்' செய்தியாளர் வன்னியில் இருந்து தெரிவிக்கின்றார். முதலாவது எறிகணைத் தாக்குதலில் 22 பேரும் இரண்டாவது தடவையாக நடத்தப்பட்ட எறிகணைத் தாக்குதலில் அதிகமானோரும் கொல்லப்பட்டதாக எமது செய்தியாளர் மேலும் கூறுகின்றார். ஆறுக்கும் அதிகமான எறிகணைகள் மருத்துவமனை மீதும் சூழவுள்ள பகுதிகளிலும் வீழ்ந்து வெடித்தன. இத்தாக்குதலில் ஏற்கனவே காயமடைந்து மருத்துவமனையில் சிகிச்சை பெற்றுவந்த நோயாளர்கள் உட்பட 63 பேர் படுகொலை செய்யப்பட்டனர். 87 பேர் காயமடைந்தனர். கொல்லப்பட்டவர்களில் நோயாளர்கள், நோயாளர்களுக்கு உதவியாக இருந்தவர்கள், வெளியிடங்களில் இருந்து சிகிச்சை பெறவந்த வெளிநோயாளர்கள் என பலரும் அடங்குவர். இத்தாக்குதலில் 63 பேர் கொல்லப்பட்டதனை முல்லைத்தீவு மாவட்ட மருத்துவ அத்தியகட்சகர் வீரகத்தி சண்முகராஜா உறுதிப்படுத்தியிருக்கின்றார்.
Saturday, May 02, 2009
Subscribe to:
Post Comments (Atom)
0 kommentarer:
Post a Comment
உங்களுடைய கருத்தை தெருவிக்கவும்!
நீங்கள் உங்கள் கருத்தை எழுதும் பொழுது தயவுசெய்து முடிந்தவரை தமிழில் எழுதவும்.