[திங்கட்கிழமை, 18 மே 2009,]
பெரும் வல்லரசுகளின் ஆயுத மற்றும் தொழில்நுட்ப உதவியோடும், இந்தியப் படையினரின் நேரடிப் பங்களிப்போடும் தமிழினத்தையும் தமிழர்களின் தலைமையையும் அழிப்பதற்கு போர் தொடுத்துள்ள சிறிலங்கா அரசின் இறுக்கமான முற்றுகையை உடைத்துக் கொண்டு தமிழீழ விடுதலைப்புலிகளின் தலைவர் வேறு ஒரு தளத்திற்கு சென்று விட்டதாக உறுதிப்படுத்தமுடியாத செய்திகள் தெரிவிக்கின்றன.
பொட்டம்மான், சூசை, கபில் அம்மான், ரட்ணம் மாஸ்ரர், ஜெயம், வேலவன், லோரன்ஸ் போன்ற தளபதிகளும் தேசியத் தலைவருடன் சென்று விட்டதாகச் சொல்லப்படுகின்றது. இன்று அதிகாலை நந்திக் கடலில் விடுதலைப் புலிகள் நடத்திய ஊடறுப்புத் தாக்குதலை தொடர்ந்து தேசியத் தலைவரும் தளபதிகளும் முற்றுகையை உடைத்திருக்கலாம் என்று சிறிலங்காப் படைத் தரப்பு மட்டத்தில் பேசப்படுகின்றது.
தமிழீழ விடுதலைப்புலிகளின் தலைவர் தற்கொலை செய்து கொண்டு விட்டதாகவும், கைது செய்யப்பட்டு விட்டதாகவும், அவருடைய உடல் பனகொடை முகாமில் உள்ளதாகவும் பல வதந்திகள் சிங்கள மக்கள் மத்தியில் உலாவிக் கொண்டுள்ள நிலையில் இந்த செய்தி வந்துள்ளது.
இதில் உண்மையான செய்தியை அறிவதற்கு சில மணித்தியாலங்களோ, சில நாட்களோ, சில மாதங்களோ காத்திருக்க வேண்டி வரலாம் என்றே படுகின்றது.
தற்பொழுது இன்று (18.05.09) தமிழீழ விடுதலைப்புலிகளின் தலைவர் சிறிலங்காப் படையினரால் கொல்லப்பட்டு விட்டதாக பன்னாட்டு ஊடகங்களில் செய்தி பரவ விடப்பட்டுள்ளது.
Monday, May 18, 2009
சிறிலங்கா படையினரின் முற்றுகையை உடைத்து தமிழீழ விடுதலைப்புலிகளின் தலைவர் வெளியேறினார்?
Monday, May 18, 2009
No comments
Subscribe to:
Post Comments (Atom)
0 kommentarer:
Post a Comment
உங்களுடைய கருத்தை தெருவிக்கவும்!
நீங்கள் உங்கள் கருத்தை எழுதும் பொழுது தயவுசெய்து முடிந்தவரை தமிழில் எழுதவும்.