[திங்கட்கிழமை, 18 மே 2009]
தமிழ் மக்களுக்கு பாதகமான பல தகவல்களை சிங்கள படையினர் பரப்பிவருவதனால் தமிழ் மக்களை வதந்திகளை நம்பாமல் பொறுமை காக்குமாறு கோரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.
முள்ளியவாய்க்கால் பகுதியில் சிங்கள படையினரின் தாக்குதலில் தலைவர் உட்பட பல தளபதிகள் கொல்லப்பட்டதாக சிங்கள படையினர் வதந்தியான தகவல்களை தமது ஊடகங்கள் மூலம் பரப்பிவருவதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
வன்னியில் எஞ்சியுள்ள மக்களை முழுமையாக அழித்து தான் மேற்கொள்ளும் மிக மோசமான படுகொலையை வெளியுலகிற்கு மறைப்பதற்காக பல்வேறு கதைகளை அது கட்டவிழ்த்து விட்டுள்ளது.
சிறிலங்காவின் இந்தப் பிரச்சாரத்தில் மூழ்கியுள்ள சர்வதேச ஊடகங்கள் அங்கு கொல்லப்படுகின்ற மக்களின் நிலை குறித்து எந்தவித கருத்துக்களையும் வெளியிடாது, சிறிலங்கா வெளியிடுகின்ற விடுதலைப் புலிகளின் இழப்புக்கள் குறித்த செய்திகளை வெளியிடுவதில் முக்கிய கவனம் செலுத்துகின்றன.
சர்வதேச ஊடகங்களுக்கு மட்டுமன்றி புலம்பெயர்ந்த மக்களையும் இலங்கையில் வாழும் தமிழ் மக்களையும் குழப்புகின்ற பாரிய திட்டங்களுடன் முன்னெடுக்கப்பட்டுள்ள இந்தப் பரப்புரை குறித்து தமிழ் மக்கள் விழிப்போடு சேயற்படுங்கள். ஒரு இன அழிவை மறைப்பதற்கு சிறிலங்கா மேற்கொண்டுள்ள பாரிய இந்த ஊடகப் போரை கவனமாக எதிர்கொள்ளுங்கள்
Monday, May 18, 2009
வதந்திகளை நம்பவேண்டாம் பொறுமை காக்குமாறு வேண்டுகோள்
Monday, May 18, 2009
No comments
Subscribe to:
Post Comments (Atom)
0 kommentarer:
Post a Comment
உங்களுடைய கருத்தை தெருவிக்கவும்!
நீங்கள் உங்கள் கருத்தை எழுதும் பொழுது தயவுசெய்து முடிந்தவரை தமிழில் எழுதவும்.