[செவ்வாய்க்கிழமை, 05 மே 2009] சிறீலங்கா அரசின் நடவடிக்கைகளுக்கு சீன அரசு ஒரு மில்லியன் (10 இலட்சம்) அமெரிக்க டொலர் உதவ உள்ளதாக சீன வெளிவிவகார அமைச்சு அறிவித்துள்ளது. இது பற்றிய அறிவித்தலை வெளியிட்டுள்ள சீன வெளி விவகார அமைச்சின் போச்சாளர் Ma Zhaoxu சிறீலங்காவின் உள்ளநாட்டு பிரச்சினை பற்றி தாம் ஆழ்ந்த கருசணை கொண்டுள்ளதாகவும் கடந்த 80 களில் இருந்து போரினால் பாதிக்கப்பட்டு தற்போது இடம்பெயர்ந்துள்ள மக்களுக்கு உதவவே இவ் நிதியை தாம் வழங்குவதாக தெரிவித்துள்ளார். இது அடிப்படை கரிசணை மீதான கொடுப்பனவு என்றும் அவர் மேலும் தெரிவித்துள்ளார். சிறீலங்கா மிகப்பெரும் பொருளாதார நெருக்கடியில் உள்ளதுடன் சர்வதேச நாணய நிதியத்திடம் கடன் பெற முயன்று தோற்றுள்ள நிலையில், ஐப்பான் சிறப்பு தூதுவர் ஜசூசி அகாசி சிறீலங்காவுக்கு விஜயம் மேற்கொண்டதை தொடர்ந்து இவ் அறிவிப்பு வெளியாகி இருப்பதுடன் சிறீலங்கா அரசு நிதியுதவிகளுக்கு மேற்கு உலகத்தில் இருந்து கிழக்கை நோக்கி நகர ஆரம்பித்துள்ளதாக ஏ.எவ்.பி செய்தி வெளியிட்டுள்ளதும் இங்கு சுட்டிக்காட்டத்தக்கது.
Tuesday, May 05, 2009
Subscribe to:
Post Comments (Atom)
0 kommentarer:
Post a Comment
உங்களுடைய கருத்தை தெருவிக்கவும்!
நீங்கள் உங்கள் கருத்தை எழுதும் பொழுது தயவுசெய்து முடிந்தவரை தமிழில் எழுதவும்.