Friday, April 17, 2009

ஈழத் தமிழர் படுகொலையைக் கண்டித்து தமிழ்நாட்டில் மேலும் ஒருவர் தீக்குளிப்பு

[வெள்ளிக்கிழமை, 17 ஏப்ரல் 2009] இலங்கையில் இனப்படுகொலைக்கு உள்ளாகும் தமிழர்களைப் பாதுகாக்க வலியுறுத்தி இன்று மேலும் ஒருவர் தீக்குளித்திருக்கின்றார். கரூரைச் சேர்ந்தவர் ஆ.சிவானந்தம் (வயது 46). சென்னைக்குச் சென்ற இவர், இன்று வெள்ளிக்கிழமை இரவு 8:15 நிமிடமளவில் வடபழனியில் தமிழகத் தேர்தல் ஆணைய அலுவலகத்துக்கு எதிரே உடலில் மண்ணெண்ணெய்யை ஊற்றித் தீ மூட்டிக்கொண்டார். அக்கம் பக்கத்தில் உள்ளவர்கள் தீயை அணைத்தனர். வடபழனி காவல்துறையினர் அவரை கீழ்ப்பாக்கம் அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் சேர்த்தனர். இலங்கையில் நச்சுக் குண்டுகளை வீசி தமிழர்கள் இனப்படுகொலை செய்யப்படுவதை தடுத்து நிறுத்தவே தீக்குளித்தேன் என்று மருத்துவமனையில் காவல்துறையினரிடம் அவர் வாக்குமூலம் அளித்துள்ளார். அவருக்கு உடலில் 80% தீக்காயங்கள் ஏற்பட்டுள்ளதாக மருத்துவர்கள் தெரிவித்தனர். தீக்குளித்த இளைஞர் சிவானந்தத்தை இலங்கைத் தமிழர் பாதுகாப்பு இயக்க ஒருங்கிணைப்பாளர் பழ.நெடுமாறன், ம.தி.மு.க. பொதுச் செயலாளர் வைகோ ஆகியோர் கீழ்ப்பாக்கம் மருத்துவமனையில் சந்தித்து நலம் விசாரித்தனர். இலங்கையில் தமிழர்கள் இனப்படுகொலை செய்யப்படுவதை எதிர்த்து தமிழ்நாட்டில் முத்துக்குமார் தொடங்கி ஏற்கெனவே 12 பேர் தீக்குளித்துள்ளனர்.

0 kommentarer:

Post a Comment

உங்களுடைய கருத்தை தெருவிக்கவும்!

நீங்கள் உங்கள் கருத்தை எழுதும் பொழுது தயவுசெய்து முடிந்தவரை தமிழில் எழுதவும்.