Friday, April 17, 2009

அனைத்துலக நாடுகளின் அழுத்தங்களுக்கு அடிபணியோம்: மகிந்த சூளுரைப்பு

[வெள்ளிக்கிழமை, 17 ஏப்ரல் 2009] அனைத்துலக நாடுகள் எத்தகைய அழுத்தங்களை கொடுத்தாலும் தமிழீழ விடுதலைப் புலிகளுக்கு எதிரான போர் ஒருபோதும் நிறுத்தப்படமாட்டாது என்று சிறிலங்காவின் அரச தலைவர் மகிந்த ராஜபக்ச சூளுரைத்துள்ளார். சிறிலங்கா சுதந்திரக் கட்சியின் பிரதேச அமைப்பாளர்கள், உறுப்பினர்கள் ஆகியோருடன் அலரி மாளிகையில் இன்று வெள்ளிக்கிழமை நடைபெற்ற கலந்துரையாடல் ஒன்றிலேயே அவர் இவ்வாறு தெரிவித்தார். படையினரின் தியாகங்களுக்கு மாறான செயற்பாடுகள் எதனையும் அரசாங்கம் செய்யாது. அத்துடன் சிறுதுண்டு காணி கூட விடுதலைப் புலிகளின் கட்டுப்பாட்டில் இருக்கக்கூடாது என்பதும் சிறிலங்கா சுதந்திர கட்சியின் நிலைப்பாடு என்று கூறிய அரச தலைவர் மகிந்த ராஜபக்ச, புலிகள் முற்றாக அழிக்கப்படுவார்கள் எனவும் தெரிவித்துள்ளார். அனைத்துலக நாடுகள் நிதி உதவி வழங்குவதற்கு விதிக்கும் நிபந்தனைகள் எதனையும் அரசாங்கம் ஏற்கவில்லை. சிறிலங்காவின் தேசியத்தை புலிகளின் பிடியில் இருந்து காப்பாற்றினோம். அதேபோன்று அனைத்துலக ஏகாதிபத்தியவாதிகளுக்கு தேசியத்தை தாரை வார்க்க மாட்டோம் என்று அரச தலைவர் மகிந்த ராஜபக்ச சூளுரைத்தார்.

0 kommentarer:

Post a Comment

உங்களுடைய கருத்தை தெருவிக்கவும்!

நீங்கள் உங்கள் கருத்தை எழுதும் பொழுது தயவுசெய்து முடிந்தவரை தமிழில் எழுதவும்.